பணியிலிருந்த காவலரை கன்னத்தில் அறைந்த பாஜக எம்.எல்.ஏ மீது வழக்குப்பதிவு!

பாஜக எம்எல்ஏ ஒருவர் காவலரை கன்னத்தில் அறைந்த சம்பவம் மகாராஷ்டிராவில் அரங்கேறியுள்ளது. காவலரை கன்னத்தில் அறைந்த மகாராஷ்ட்ர பா.ஜ.க. சட்டமன்ற உறுப்பினர் சுனில் காம்ப்லே மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது
காவலரை அறைந்த பாஜக எம்.எல்.ஏ சுனில் காம்ப்லே
காவலரை அறைந்த பாஜக எம்.எல்.ஏ சுனில் காம்ப்லேபுதிய தலைமுறை

பாஜக எம்எல்ஏ ஒருவர் காவலரை கன்னத்தில் அறைந்த சம்பவம் மகாராஷ்டிராவில் அரங்கேறியுள்ளது. புனே நகரில் சசூன்ஸ் மருத்துவமனையில் திருநங்கைகளுக்கு சிகிச்சை அளிப்பதற்கான தனி வார்டு திறக்கப்பட்டது.

இந்த விழாவில் மகாராஷ்டிரா துணை முதலமைச்சர் அஜித் பவார் கலந்துகொண்டார். அப்போது விழா மேடையில் பாஜக எம்எல்ஏ சுனில் காம்ப்ளேவின் பெயர் இடம்பெறவில்லை. இதனால் விரக்தியடைந்து மேடையிலிருந்து கீழே இறங்கியபோது பாஜக எம்எல்ஏ சுனில் காம்ப்ளே, தடுமாறினார்.

காவலரை அறைந்த பாஜக எம்.எல்.ஏ சுனில் காம்ப்லே
காவலரை அறைந்த பாஜக எம்.எல்.ஏ சுனில் காம்ப்லே

அப்போது கோபமடைந்த அவர் அங்கு பாதுகாப்பு பணிக்காக படிக்கட்டில் நின்றிருந்த காவலரை கன்னத்தில் அறைந்தார். இதனால் அங்கு கூடியிருந்த அனைவரும் அதிர்ச்சியில் உறைந்தனர். தொடர்ந்து பாஜக எம்எல்ஏ அந்த இடத்திலிருந்து புறப்பட்டுச் சென்றார். துணை முதலமைச்சர் பங்கேற்ற விழாவில் எம்எல்ஏ ஒருவர் காவலரை அறைந்த வீடியோ சமூகவலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.

காவலரை அறைந்த பாஜக எம்.எல்.ஏ சுனில் காம்ப்லே
தெலங்கானா: ஆறாவது மாடியில் இருந்து குதித்து கல்லூரி மாணவி எடுத்த விபரீத முடிவு

இதனிடையே காவலரை அறைந்த பாஜக எம்எல்ஏக்கு பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். பாஜக எம்எல்ஏ சுனில் காம்ப்ளே ஏற்கெனவே பெண் ஊழியரை துன்புறுத்தி சர்ச்சையில் சிக்கியவர் என்பது குறிப்பிடத்தக்கது.

கண்டனங்கள் வலுத்ததை அடுத்து, மகாராஷ்ட்ர பா.ஜ.க. சட்டமன்ற உறுப்பினர் சுனில் காம்ப்லே மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. அவர்மீது சட்டப்பிரிவு 353-ன் கீழ் புனேவிலுள்ள பண்ட்கார்டன் காவல்நிலையத்தில் வழக்கு பதியப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com