10.08.2025 headlines FB
இந்தியா

HEADLINES | கேதார்நாத் நிலச்சரிவு முதல் மனைவி ஷாலினியுடன் நடிகர் அஜித்குமார் கல கல பேச்சு வரை!

இன்றைய நாளின் தலைப்பு செய்திகளை இங்கே தெரிந்து கொள்ளலாம்..

Vaijayanthi S

1. தமிழகத்தில் நாமக்கல், பெரம்பலூர், வாணியம்பாடி உள்ளிட்ட பகுதிகளில் மழை.. உசிலம்பட்டியில் பெய்த கனமழையால் சாலையில் பெருக்கெடுத்த வெள்ளம்...

2. உத்தராகண்ட், இமாச்சலப் பிரதேசம் உள்ளிட்ட வடமாநிலங்களை மிரட்டும் கனமழை... ஆறுகளில் வெள்ளம், ஆங்காங்கே நிலச்சரிவு தொடர்வதால் மக்கள் அவதி...

3. உத்தராகண்ட் அருகே கேதார்நாத் தேசிய நெடுஞ்சாலையில் நிலச்சரிவு... வாகன ஓட்டிகள் தப்பிய நிலையில் காட்சி வெளியாகி அதிர்ச்சி....

4. பாகிஸ்தானின் ஒரு விமானம் கூட சுட்டு வீழ்த்தப்படவில்லை.... ஆபரேஷன் சிந்தூரில் 5 பாகிஸ்தான் போர் விமானங்கள் அழிக்கப்பட்டதாக இந்திய விமானப்படை கூறிய நிலையில், அந்நாட்டு பாதுகாப்பு அமைச்சர் மறுப்பு....

5. வாக்குத் திருட்டு விவகாரம் எதிரொலியாக தேர்தல் ஆணைய இணையதளத்தில் வாக்காளர் பட்டியல்கள் நீக்கமா? சமூக வலைதளங்களில் வெளியான தகவல் தவறானது என்று தேர்தல் ஆணையம் நிராகரிப்பு...

6. கர்நாடக தேர்தல் குறித்த குற்றச்சாட்டுக்கான ஆதாரங்களை உறுதிமொழி பத்திரத்துடன் தாக்கல் செய்ய வேண்டும்... இல்லையென்றால் நாட்டிடம் மன்னிப்பு கேளுங்கள் என ராகுல் காந்திக்கு தேர்தல் ஆணையம் மீண்டும் வலியுறுத்தல்...

7. மத்திய அரசால் முடியாததை தாம் செய்வதால் அதிமுகவினருக்கு வயிற்றெரிச்சல்...சென்னை தாம்பரத்தில் நடந்த அரசு நிகழ்ச்சியில் முதல்வர் ஸ்டாலின் கடும்தாக்கு...

8. அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக அதிமுக திட்டங்களை திமுக அரசு முடக்கியது....ஏரிகள் தூர்வாரும் திட்டங்களை சுட்டிக்காட்டி எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டு....

அன்புமணி ராமதாஸ்

9. எம்ஜிஆர், ஜெயலலிதாவை அவமதிக்கும்நோக்கம் தனக்கு இல்லை...பழனிசாமியின் குற்றச்சாட்டுக்கு திருமாவளவன் பதில்...

10. பாமக தலைவராக அன்புமணியே தொடர்வார் என மாமல்லபுரத்தில் நடந்தபொதுக்குழு கூட்டத்தில் தீர்மானம்... நிறுவனர் ராமதாஸ்தான் வழிகாட்டி என அன்புமணி பேச்சு...

11. பூம்புகாரில் நடக்கும் மாநாட்டுக்கு வர பாமக நிறுவனர் ராமதாஸ் அழைப்பு... அன்புமணி குறித்த கேள்விக்கு தற்போது வேறொன்றும் சொல்வதற்கு இல்லை எனவும் பேட்டி...

12. சாத்தூர் அருகே சட்டவிரோதமாக வீட்டில் பட்டாசு தயாரித்தபோது ஏற்பட்ட வெடி விபத்தில் மூவர் உயிரிழந்த சம்பவம்... சட்டவிரோத பட்டாசு தயாரித்தை தடுக்க அதிரடி சோதனை நடத்தப்படும் என மாவட்ட எஸ்.பி. கண்ணன் எச்சரிக்கை...

13. மேற்கு வங்கத்தில் பெண் மருத்துவர் பாலியல் கொலை சம்பவத்தின் முதலாம் ஆண்டு நினைவுநாள்....கொல்கத்தா நகரில் பேரணியாக சென்று போராட்டம் நடத்தியவர்கள் மீது காவல் துறையினர் தடியடி....

Ajith shalini

14. மதுரை அழகர்கோவில் கருப்பணசாமி கோயிலில் சந்தன சாத்துபடி நிகழ்ச்சி....சன்னதி கதவு திறக்கப்பட்டதும் பக்தி முழக்கத்துடன் ஏராளமானோர் தரிசனம்....

15. திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பெளர்ணமி கருட சேவை... திரளான பக்தர்கள் காத்திருந்துதரிசனம்...

16. மனைவி ஷாலினியுடன் நடிகர் அஜித்குமார் கல கல பேச்சு.... இணையத்தில் லைக்ஸ்-களை அள்ளும் வீடியோ....