Airtel PTI
இந்தியா

பொதுமக்களுக்கு அடுத்த Shock.. கட்டணத்தை உயர்த்திய AIRTEL.. நீக்கப்பட்ட முக்கிய பிளான் என்ன?

ஏர்டெல் நிறுவனம் முக்கிய 4 ப்ரீபெய்ட் திட்டங்களை நிறுத்தியுள்ள நிலையில், 16 சதவீத விலை உயர்வுடன் புதிய ப்ரீபெய்ட் கட்டணத்தையும் அறிவித்துள்ளது.

Praveen Joshva L

இந்தியாவில் வாடிக்கையாளர்கள் எண்ணிக்கை அடிப்படையில் ஜியோ நிறுவனத்துக்கு (Reliance Jio) அடுத்தபடியாக 2-வது மிகப்பெரிய தொலைத்தொடர்பு நிறுவனமாக ஏர்டெல் நிறுவனம் உள்ளது. அதாவது, இந்தியாவின் தொலைத்தொடர்பு சந்தையில் ஏர்டெல் நிறுவனம் சுமார் 32% முதல் 33% வரை பங்கையும், ஜியோ நிறுவனம் சுமார் 40% - 41% சந்தைப் பங்கையும் தன் வசம் வைத்துள்ளது. இதனால் இந்த துறையில் இவ்விரு நிறுவனங்களே ஏகபோக ஆதிக்கத்தைச் செலுத்துகின்றன. தொடக்கத்தில் குறைவான கட்டணங்கள் மூலம் பொதுமக்களை ஈர்த்த இந்த நிறுவனங்கள், தற்போது இதற்கான கட்டணங்களை போட்டபோட்டு தொடர்ந்து அதிகரித்து வருகின்றன. ்

அந்த வகையில், தற்போது ஏர்டெல் நிறுவனம் தனது கட்டணங்களை திடீரென உயர்த்தியுள்ளது. ஏர்டெல் நிறுவனத்தின் ரூ.299 திட்டம் அதிக பேரால் பயன்படுத்தப்படும் திட்டமாக இருந்துவந்தது. தற்போது இந்த திட்டத்தின் விலையை 16 சதவீதம் உயர்த்தி ரூ. 349-க்கான திட்டமாக மாற்றியுள்ளது.

அதேபோல 28 நாள்கள் செல்லுபடியாகும் பழைய 299 பிளானில் நாள்தோறும் 1.5 ஜிபி டேட்டா கிடைத்துவந்த நிலையில், தற்போது விலையேற்றப்பட்டுள்ள ரூ.349 திட்டத்தில் நாள்தோறும் 2 ஜிபி டேட்டா கிடைக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ஏர்டெல் நிறுவனம் ரூ.579, ரூ.619 மற்றும் ரூ.649 ஆகிய மூன்று ப்ரீபெய்ட் (prepaid) திட்டங்களை நிறுத்திவிட்டதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. ஜியோ தற்போது வரம்பற்ற வாய்ஸ் அழைப்புகள், தினசரி 2ஜிபி டேட்டா மற்றும் 28 நாட்கள் செல்லுபடியாகும் காலத்துடன் ரூ.349 திட்டத்தை வழங்கும் நிலையில், அதே விலையில் ஏர்டெல்லின் திட்டமும் மாற்றப்பட்டுள்ளது. ஏர்டெல்லின் திடீர் கட்டண உயர்வு மற்றும் குறைந்த விலைத் திட்டங்களின் நீக்கம் மொபைல் வாடிக்கையாளர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.