Airtel பயனர்களுக்கு ஜாக்பாட்.. ஒரு வருடத்திற்கு இலவசம்.. ரூ.17,000 -ஐ மிச்சப்படுத்துவது எப்படி?
ஏர்டெல் டெலிகாம் நிறுவனம் அதன் பயனர்களுக்கு Perplexity Pro AI பயன்பாட்டை ஓராண்டுக்கு இலவசமாக வழங்குகிறது. அதனை பயனர்கள் கிளைம் செய்வது எப்படி என்பதை பார்ப்போம்.
இந்தியாவின் முன்னணி தொலைதொடர்பு நிறுவமான Airtel, அதன் பயனாளர்களுக்கும் ₹17,000 மதிப்புள்ள Perplexity Pro வருட சந்தாவை 12 மாதங்களுக்கு முற்றிலும் இலவசமாக வழங்குகிறது. ஏர்டெல் மற்றும் Perplexity இடையிலான பார்ட்னர்ஷிப் மூலம் இது செயல்பாட்டுக்கு வந்துள்ளது.
வீடு, இணையம், DTH சந்தாதாரர்களும் இச்சலுகையை பெறலாம். இந்த சலுகை இந்தியாவில் முதன்முறையாக வழங்கப்படுகிறது மற்றும் Airtel Thanks செயலியில் Rewards பகுதியில் “Claim Now” மூலம் இதை எளிதில் பெறலாம்.
Perplexity Pro என்றால் என்ன?
Perplexity என்பது கூகுள் சர்ச் இஞ்சின் போன்ற பாரம்பரிய தேடல்களைவிட புதுமையான, உடனடி பதில்களை வழங்கும் நுண்ணறிவுத் தேடல் இயந்திரம். நீங்கள் கேள்வி கேட்டால், டைரக்ட் ஆன பதில் மற்றும் அதன் மூலத்தை சிறந்த acccuracyயுடன் தரும்.
சிறந்த பயன்பாடுகள்:
மாணவர்களுக்கு: கல்விப் பாடங்களுக்கு விரைவான பதில்கள், சுருக்கக் குறிப்புகள், தேர்வு தயாரிப்பு. அதை pdf, csv என நமக்கு வேண்டும் விதத்தில் மாற்றிக்கொள்ளலாம்.
தொழில்முறை நபர்களுக்கு: வணிக தகவல் சேகரிப்பு, பட்ஜெட் திட்டமிடல், சார்ந்த தகவல்கள், ஆய்வுகள், முக்கியமான புள்ளிவிவரங்கள்.
Content Creators: வலைப்பதிவு, வீடியோ ஸ்கிரிப்ட், பிளாக் பதிவுகள் தமிழிலும், ஆங்கிலத்திலும் உருவாக்க முடியும்.
இல்லத்தரசிகள் மற்றும் பயணிகள்: சமையல் குறிப்புகள், உடல்நலம், பராமரிப்பு, பயண திட்டங்கள் தயாரித்தல். ஏதேனும் Instant Solution தேவைப்பட்டால் அதையும் கேட்டுக்கொள்ளலாம்.
AI பயனர்கள்: சோதனை, மொழிமாற்றம், குறிப்புகள், பட உருவாக்கம்,File analysis, மருத்துவம், சட்டம் போன்ற பல துறைகளுக்கு விரிவான உதவி.
துல்லியத் தகவல்: அனைத்து பதில்களுக்கும் மூல சான்றுகள் இணைத்து வழங்கும் வகையிலான தரமான பதில்கள், நம்பகமான தகவல்கள்.
எப்படி பெறுவது?
Airtel Thanks செயலியில் Rewards பகுதியைத் திறந்து, Perplexity Pro offer-ஐ தெரிவுசெய்து, “Claim Now” க்ளிக் செய்து பெற்றுக்கொள்ளலாம். எந்த தொகையும் அல்லது கிரெடிட் கார்டும் கேட்கப்படாது, OTP-ஐ மட்டுமே உறுதிப்படுத்தினால் போதும். 360 மில்லியன் பயனர்களுக்கு இது இலவசமாக கிடைக்கும்.
கூகுள் ப்ரோ இலவசமாக கல்லூரி மாணவர்களுக்கு வழங்கப்படுகிறதே அதற்கு கிரெடிட் கார்டு கணக்குகள் தேவை. பெர்ப்ளெக்ஸிட்டி ப்ரோ அப்படி எந்த தகவல்களையும் கேட்காது என்பது கூடுதல் பிளஸ்.