குறைவான தூக்கம் முகநூல்
ஹெல்த்

குறைவான தூக்கம், ஆனால் புத்துணர்ச்சி.. சரியானதா? நவீன ஆய்வுகள் சொல்வது என்ன? மருத்துவர் விளக்கம்!

சாதாரணமாக ஒரு மனிதனின் தூக்கம் என்பது குறைந்தது 6 மணி நேரம் தொடங்கி 8 மணி நேரம் கொண்டதாக இருக்க வேண்டும்.

ஜெனிட்டா ரோஸ்லின்

குறைவான தூக்கம்.. நவீன ஆய்வுகள் சொல்வதென்ன? மருத்துவர் பூபதி ஜான் தரும் விளக்கம்:

அதிக நேரம் தூங்குபவர்களுக்கும் குறைவான நேரம் தூங்குபவர்களுக்கும் இடையே ஆய்வு மேற்கொள்ளப்படுகிறது. அதன்மூலம் ஒருவரின் ஜீன்கள் அவரது தூக்கத்தை நிர்ணயிக்கிறது என்பது கண்டறியப்படுகிறது. மேலும், ஒருவர் செய்யும் வேலை, சிந்தனை உட்பட அனைத்தையும் நிர்ணயிப்பது ஜீன்கள்தான் என்பதும், இதில் புறக்காரணிகளான சுற்றுச்சூழல், சமுதாயம் போன்றவை பல மாற்றங்களை செய்து வருகிறது என்பது கண்டறியப்படுகிறது.
அறுவை சிகிச்சை மருத்துவர் - பூபதி ஜான்

4 - 6 மணி நேரத்தூக்கமே போதுமானதா?

சாதாரணமாக ஒரு மனிதனின் தூக்கம் என்பது குறைந்தது 6 மணி நேரம் தொடங்கி 8 மணி நேரம் கொண்டதாக இருக்க வேண்டும்.

உதாரணமாக: 1 மில்லியன் மக்களில் 10 பேரை தவிர மற்ற அனைவரும் நன்றாக தூங்கக்கூடியவர்களாக இருந்தால் ...

மீதமிருக்கும் 10 பேர் குறைவான தூக்கம் கொண்டவர்களாக இருப்பார்கள்.. குறைவான நேரம் தூங்கினாலும், புத்துணர்ச்சி கொண்டவர்களாகவே இருப்பார்கள்.. இந்த குறைவான தூக்கத்தை தீர்மானிப்பது மரபணுக்கள்தான்.

இந்த மரபணுக்கள் மிகவும் அரிதானவை. இந்த அரிதான மரபணுக்கள் இருப்பவர்கள்தான் 4 மணி நேரம் தூக்கம் கொண்டவர்களாக இருக்கிறார்கள். ஆய்வு ஒன்றில், இப்படி குறைவான தூக்கம் கொண்டவர்களுக்கு ஏதேனும் பாதிப்பு இருக்கிறதா என்று சோதனை செய்து பார்க்கப்படுகிறது. இவர்களுக்கு எந்த பாதிப்பு இல்லை என்பது கண்டறியப்படுகிறது.

இதற்கு உதாரணமாகதான் தாமஸ் ஆல்வா எடிசனை கூறுகிறார்கள். அதேசமயம், இந்த அரிதான மரபணு எல்லா மனிதர்களுக்கும் இருக்காது என்பதையும் நாம் புரிந்துக்கொள்ள வேண்டும்.

Orexin என்ற ஹார்மோன் அதிகமாக சுரந்தால் ஒருவர் அதிகமாக விழித்துக்கொண்டு இருப்பார். இதுவே குறைவாக சுரந்தால் தூக்கம் உண்டாகும்.

மேலும், தூக்கத்தை உண்டாக்கும் மெலடோனின் போன்ற சில ஹார்மோன்களும் உள்ளது.

தூக்கத்தை உண்டாக்கும் இந்த ஹார்மோன்கள் வெளிச்சம் போன்ற புறக்காரணிகளின் தலையீட்டால், விழித்திருக்கும் ஹார்மோனை அதிகப்படுத்தி தூக்கத்தை ஏற்படாமல் தடுக்கிறது. இதுவே நாம் தூங்கும் நேரத்தில் வெளிச்சத்தை தவிர்த்தால் தூக்கத்தை உண்டாக்கும் சுரப்பிகள் சுரந்து தூக்கத்தை உண்டாக்குகிறது.

தூக்கம் என்பது மிகவும் அவசியம்!

தூக்கம் என்பது மூளைக்கு நாம் கொடுக்கும் ஓய்வு. மேலும், இதன்மூலம் மூளையில் இருக்ககூடிய கழிவுகள் வெளியேற்றப்படுகிறது.

தூங்கும்போதுதான், மூளை memory ஐ சேமிக்கிறது. ஆக... தூக்கத்தை கட்டுப்படுத்துவது ஜீன்கள்தான். இந்த ஜீன்கள் அரிதினும் அரிதானவர்களுக்குதான் இருக்கும். குறைவாக தூங்கும் அனைவரும் இந்த ஜீன்கள் தங்களுக்கு இருக்கிறது என்று இதனை பொதுவானதாக எடுத்துக்கொள்ளக்கூடாது.

குறிப்பு: இக்கட்டுரை ஆய்வு ஒன்றின் அடிப்படையில் எழுதப்பட்டது. ஒரு மனிதனுக்கு 8 மணி நேரம் தூக்கம் என்பது இன்றியமையாதாது. அதில் எந்த மாற்றமும் இல்லை. நல்ல தூக்கம் என்பது நல்லது சிந்தனை, நல்ல செயல் உடலை ஆரோக்கியமாக வைக்கும். இதுதான் அடிப்படை என்பதை மறக்க வேண்டாம்.