டயாலிசிஸ், உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை எனத் தவித்துக்கொண்டிருக்கும் சிறுநீரக நோயாளிகளுக்காகவே வந்துள்ளது செயற்கை சிறுநீரகம். அது எப்படி செயல்படும்.. தற்போது பார்க்கலாம்.. என்ன மக்களே.. டயாலிசிஸ் பண்ணிக்கிட்டு இருக்கீங்களா? இல்லை, இனிமே பண்ணணும்னு டாக்டர் சொல்லிட்டாரா? கவலைப்படாதீங்க.. ரொம்ப கஷ்டமான செயல் இனிமேல் இல்லை.. அமெரிக்காவையும், தென்கொரியாவையும் சேர்ந்த விஞ்ஞானிகள், நம்ம உடம்புல இருக்கிற சிறுநீரகத்த மாதிரியே ஒரு செயற்கை சிறுநீரகத்தை உருவாக்கிட்டாங்க.. இந்தச் செயற்கை சிறுநீரகம், நோயாளிகளோட வாழ்க்கையில ஒரு பெரிய மாற்றத்தைக் கொண்டு வரும்னு சொல்றாங்க. கேட்கவே அடேங்கப்பானு இருக்குல... இந்தக் கருவி என்னெல்லாம் செய்யும்னுகேட்டா இன்னும் பிரமிச்சுப்போயிடுவீங்க!
ஆமாம், உண்மையான சிறுநீரகம் என்னல்லாம் பண்ணுமோ, அதையெல்லாம் இதுவும் பண்ணும். இரத்தத்தை வடிகட்டுறது, உப்பு சத்தைக் கரெக்டா வச்சுக்கிறது, சிறுநீரைக் கூட உற்பத்தி செய்றதுனு எல்லா வேலைகளையும் கச்சிதமா செய்து அசத்துதாம். அப்படியே நம்ம உடம்புக்குள்ள இருக்குற ஸ்டெம் செல்கள் மாதிரி சிலவி ஷயங்களை வெச்சு இதை உருவாக்கியிருக்காங்களாம். அதனாலதான், இது நிஜமான சிறுநீரகம் மாதிரியே 90% வேலை செய்யும்னு ஆராய்ச்சியாளர்கள் சொல்லியிருக்காங்க.
இனிமே மாற்று அறுவை சிகிச்சைக்காக யாரும் காத்துக்கிடக்க வேணாம், டயாலிசிஸ் செய்ய ஹாஸ்பிடலுக்குப்போற தொல்லை இனி இல்லை,.. இந்தச்சின்ன கருவியைக் கையிலேயே கட்டிக்கிட்டு வேலைக்குப் போலாம், வெளியூர் போகலாம். ஏன்னா, இதுமருத்துவச் செலவுகள கம்மிபண்றதோட,கிராமப்புற மக்களுக்குக்கூட இந்த நவீன சிகிச்சையை எளிதா கிடைக்கச்செய்யும்னு சொல்றாங்க விஞ்ஞானிகள்டீம்....
இது எப்போங்க ஹாஸ்பிடல்ல வரும்னுநீங்க நினைக்கிறது புரியுது... 90 சதவீதம்வேலைகள் எல்லாம் முடிஞ்சுதாம்... மீத இருக்கிற டெஸ்டிங்க் பிராசஸ்முடிஞ்சதும், இன்னும் சில காலங்கள்ல இந்த ‘ஆர்டிபிஷியல் கிட்னி’ உலகளவுல பயன்பாட்டுக்கு வரும்னு சொல்லியிருக்காங்க..
இந்தக் கண்டுபிடிப்பு உண்மையிலேயே சூப்பரா இருக்கும் பட்சத்துல, எதிர்காலத்தில் வேற உறுப்புகள்ல ஏதாவது பிரச்சனை வந்தாலும், அதையும் இப்படி செயற்கையா உருவாக்கிடலாம்னு மருத்துவர்கள் சொல்றாங்க. இந்த அறிவியல் முன்னேற்றம், நம்ம வாழ்க்கையில ஒருபெரிய மாற்றத்தை கொண்டு வரும் என ஆராய்ச்சியாளார்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.