பல் மருத்துவர் ஆர்.பி.கமல்ராஜ் PT -WEB
ஹெல்த்

பல் துலக்கும் பிரஷை எத்தனை நாட்களுக்கு ஒரு முறை மாற்றணும் தெரியுமா? விளக்குகிறார் பல் மருத்துவர்!

டூத் பிரஸ்கள் முற்றிலுமாக தேய்ந்து போகும் வரை பல் துலக்குவதை நிறுத்த மாட்டார்கள். ஆனால் டூத் பிரஸ்ஸைப் பயன்படுத்துவதற்கென சில கால அவகாசங்கள் உள்ளன. அதை அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டியது அவசியம் மருத்துவர் கமல்ராஜ் எச்சரிக்கிறார்.

Vaijayanthi S

உங்கள் பல் துலக்கும் பிரஷை ஒவ்வொரு 3 முதல் 4 மாதங்களுக்கு ஒரு முறை மாற்ற வேண்டும். பிரஷின் முட்கள் வளைந்து, தேய்ந்து, வலுவிழந்து இருந்தால், பற்களில் உள்ள அழுக்குகளை நீக்க அது பயனற்றதாகிவிடும், எனவே உடனடியாக மாற்ற வேண்டும்.

பல் துலக்கும் பிரஷை எப்போது மாறணும்?

உங்கள் பல் துலக்கும் பிரஷை 3 முதல் 4 மாதங்களுக்கு ஒரு முறை மாற்ற வேண்டும். பிரஷின் முட்கள் வளைந்து, தேய்ந்து, வலுவிழந்து இருந்தால், பற்களில் உள்ள அழுக்குகளை நீக்க அது பயனற்றதாகிவிடும், எனவே முட்கள் வளைந்து காணப்படும் டூத் பிரஷ்களை உடனடியாக மாற்ற வேண்டும்.

tooth brush

உங்கள் வாயை சுத்தமாக பராமரிப்பதில் பல் துலக்குவது முக்கியமான முதல் படியாகும், ஆனால் பலர் இதை பின்பற்றுவதில்லை.. அதிலும் அவர்கள் பயன்படுத்தும் டூத் பிரஷை அடிக்கடி மாற்றுகிறார்களா? என்பதும் கேள்விக்குறிதான்.. பெரும்பாலானோர் பழைய, தேய்ந்து போன டூத் பிரஷயே பயன்படுத்தி வருகின்றனர்.. அது நல்லதை விட அதிக தீங்கு விளைவிக்கும்.. எனவே நாம் டூத் பிரஷை எப்படி பயன்படுத்த வேண்டும்? எத்தனை நிமிடம் பல் துலக்க வேண்டும்? எத்தனை நாட்களுக்கு ஒருமுறை டூத் பிரஷை மாறணும்? பல் ஆரோக்கியம் மற்றும் பராமரிப்பு குறித்து பலவிதமான கேள்விகள் பல் மருத்துவர் ஆர்.பி.கமல்ராஜிடம் கேட்கப்பட்டது.. அதற்கு அவர் அளித்த பதில்கள் பற்றி இந்த பதிவில் தெரிந்துக் கொள்ளலாம் வாங்க..

பல் மருத்துவரின் கூற்றுப்படி, உங்கள் டூத் பிரஷை 3 முதல் 4 மாதங்களுக்கு ஒருமுறை மாற்ற வேண்டும். காலப்போக்கில், அதன் முட்கள் வளைந்து, உரிந்து பழையவையாக மாறுகின்றன.. அது போல இருக்கும் டூத் பிரஷ்கள் பல்லில் உள்ள பிளேக் மற்றும் உணவுத் துகள்களை அகற்றுவதில் சரியானமுறையில் வேலை செய்யாது. அதனால் உங்கள் டூத் பிரஷை 3 மாத உபயோகத்திற்கு பின்னர் உடனடியாக அதை மாற்றுவது நல்லது என்று மருத்துவர் கமல்ராஜ் கூறுகின்றார்...

பல் மருத்துவர் ஆர்.பி.கமல்ராஜ்

1. புதிய டூத் பிரஷ் ஏன் மாற்ற வேண்டும்:

புதிய டூத் புரஷ்கள் பற்களுக்கு இடையில் உள்ள துகள்களை அகற்ற்வும் ஈறுகளை மெல்ல தேய்க்கவும் உதவியாக இருக்கும்..

2. பாக்டீரியாக்களின் பெருக்கம்:

பழைய டீத் பிரஷில் பாக்டீரியா, ஈஸ்ட் மற்றும் பூஞ்சைகள் கூட இருக்கலாம்.. இது உங்கள் வாய்வழி ஆரோக்கியத்தை கெடுத்துவிடும் அபாயம் உள்ளது..

3. ஈறுகளின் ஆரோக்கியம்:

தேய்ந்து போன பிரஷ்கள் ஈறுகளைப் பாதுகாப்பதற்குப் பதிலாக எரிச்சலை ஏற்படுத்தக்கூடும். அதனால் அதனை உடனே மாற்றறி விடுவது நல்லது..

4. சுகாதாரம்: சுத்தமான, நன்கு பராமரிக்கப்படும் dஊத் பிரஷ்கள் பல்லின் துவாரங்கள், ஈறு நோய் மற்றும் வாய் துர்நாற்றத்தைத் தடுக்க உதவுகிறது. அதனால் உங்களைன் பற்கள் பார்பதற்கு பளிச்சென்று இருக்கும்..

சில நேரங்களில் 3 மாத காலத்திற்கு முன்பே உங்கள் டூத் பிரஷை மாற்ற வேண்டியிருக்கும்

சளி, காய்ச்சல் அல்லது தொண்டை தொற்று உங்கள் பிரஷில் கிருமிகளை விட்டுச் செல்லும். அதனால் உங்களுக்கு ஏதேனும் நோய் வந்துவிட்டு குணமாக போகும் நேரத்தில் கண்டிப்பாக உங்களின் டூத் பிரஷை முதலில் மாற்றி விடுங்கள் என்று மருத்துவர் கமல்ராஜ் எச்சரிக்கின்றார்...

tooth brush

மேலும் குழந்தைகள் பெரும்பாலும் அதிகமாக அழுத்தி பல் துலக்குவதால், அவர்களின் டூத் பிரஷ்கள் விரைவாக தேய்ந்து போகும்.. அதனால் குழந்தைகளின் டூத் பிரஷை கண்டிப்பாக அடிக்கடி பார்த்து மாற்றிவிடுங்கள்.. அல்லது கலர் இண்டிகேட்டர் டூத் பிரஷ்களை (Colour Indicator Toothbrush) பயன்படுத்துவது நல்லது என்று மருத்துவர் கூறுகிறார்.. இது தேய்ந்தவுடன் தனது நிறத்தை மாற்றிக்கொள்ளும் தன்மையுடையது..

மின்சார பல் துலக்கும் (Electric Toothbrush) பயனர்களுக்கும், இதே விதி பொருந்தும். ஒவ்வொரு 3 முதல் 4 மாதங்களுக்கு ஒருமுறை பிரஷ் ஹெட்டை மாற்றவும். மின்சார பிரஷ்கள் அதிகமான வேகத்தில் நகரும் என்பதால், அவற்றின் முட்கள் இன்னும் விரைவாக தேய்ந்து போகக்கூடும், எனவே அவற்றை தொடர்ந்து சரிபார்த்து மாற்ற வேண்டும்..

அதுபோல இன்டர்டெண்டல் பிரஷைப் (interdental brushes) பயன்படுத்தினால், இந்த பிரஷ்கள் வெவ்வேறு அளவுகளில் வருகின்றன. அதனால் முதலில் உங்களுக்கான ஆளவை உங்கள் மருதுவரிடம் கேட்டு தெரிந்துக் கொள்ளவும்.. பற்களுக்கு இடையில் உள்ள இடைவெளியை முழுமையாக நிரப்பக்கூடிய சரியான அளவைத் தேர்ந்தெடுக்கவும். இன்டர்டெண்டல் பிரஷை பற்களுக்கு இடையில் மெதுவாக நுழைக்கவும். பிரஷை பற்களுக்கு இடையில் மேலும் கீழும், முன்னும் பின்னுமாக மெதுவாக அசைத்து சுத்தம் செய்யவும்.

(interdental brushes

இதனால் பற்களுக்கு இடையே உள்ள பிளேக்குகள் மற்றும் உணவுத் துகள்கள் அகற்றப்படும்.. பற்களின் வெவ்வேறு இடங்களுக்கு வேறுபட்ட அளவிலான பிரஷ்கள் தேவைப்படலாம். உங்கள் பற்களின் வெவ்வேறு இடைவெளிகளுக்கு வெவ்வேறு அளவிலான பிரஷ்களைப் பயன்படுத்தவும் என்கிறார் மருத்துவர்..

எவ்வளவு நேரம் பல் துலக்க வேண்டும் ?

பொதுவாக நாம் அனைவருமே அதிக நேரம் பல் துலக்கினால் பல் நன்றாக இருக்கும் என்று நினைக்கிறோம் ஆனால் அது தவறு. யாராக இருந்தாலுமே 2 நிமிடத்திற்கு மேல் பல் துலக்குவது நல்லதல்ல என்கிறார் மருத்துவர் கமல்ராஜ்.. மேலும் சரியான முறையில் பல் துலக்குதல் அதனை சரியாக பராமரிப்பது பல்லை சுகாதாரமாகவும் பயனுள்ளதாகவும் வைத்திருக்கவும் முடியும் என்கிறார்..

மேலும் பல் துலக்கிய பிறகு பற்பசை மற்றும் அதில் உள்ள அழுக்குகளை அகற்ற பிரஷை எப்போது நன்றாக கழுவ வேண்டும்.. நன்கு காற்றோட்டமான இடத்தில் அதை நிமிர்ந்து வக்க வேண்டும்.. இதனால் முட்கள் காற்றில் உலர்ந்து மறுநாள் காலை உபயோகத்திற்கு ரெடியாக இருக்கும்.. இல்லையென்றால் அதில் உள்ள ஈரப்பதம் பாக்டீரியாவை எளிதாக ஈர்க்கும்.. அதனால் அதை ஒருபோதும் மூடிய கொள்கலனில் வைக்க வேண்டாம்.

பல் துலக்கும் பொருட்களைப் பகிர்வதைத் தவிர்ப்பது நல்லது

பல் துலக்கும் பொருட்களைப் பகிர்வதைத் தவிர்க்கவும், ஏனெனில் அவை கிருமிகளைப் பரப்பி வாய்வழி ஆரோக்கியத்தை பாதிக்கலாம். உங்கள் பல் துலக்குதல் என்பது பிளேக், துவாரங்கள் மற்றும் வாய் துர்நாற்றத்திற்கு எதிரான முதல் பாதுகாப்பாகும்.

உங்கள் வாய் சுகாதாரத்தை சிறப்பாக வைத்திருக்க, ஒவ்வொரு 3 மாதங்களுக்கும் அல்லது தேய்மானம் ஏற்பட்டால் அதற்கு முன்னதாகவே உங்கள் டூத் பிரஷை மாற்றவும். ஆரோக்கியமான புன்னகைக்கு, இந்தப் பழக்கத்தை சரியான முறையில் கடைப்பிடிப்பது நல்லது என்கிறார் மருத்துவர் கமல்ராஜ்.