மாரடைப்புக்குப் பிறகு உடற்பயிற்சி செய்யும் முன் இதய நிபுணரின் அனுமதி பெற வேண்டும். உடற்பயிற்சியின் போது நெஞ்சுவலி, மூச்சுத்திணறல் போன்ற அறிகுறிகள் தென்பட்டால் உடனே நிறுத்த வேண்டும். மெதுவாக தொடங்குவது பாதுகாப்பானது.
மாரடைப்பு ஏற்பட்டவர்கள் மீண்டும் உடற்பயிற்சி செய்யத் தொடங்குவதற்கு பொதுவான காலக்கெடு எதுவும் கிடையாது என மருத்துவர்கள் கூறுகின்றனர். மாரடைப்பின் தாக்கம், இதயத்தின் செயல்பாடு, சிகிச்சையைப் பொறுத்தே மீட்புக் காலம் அமையும் என்றும், முறையான கார்டியாக் ரீஹாபிலிட்டேஷன் (Cardiac rehabilitation) எனப்படும் இதய மறுவாழ்வு பயிற்சி மிகவும் அவசியமானது எனவும் அறிவுறுத்துகின்றனர். இதேபோல், ஆரம்பத்தில் நடைபயிற்சி அல்லது சைக்கிள் ஓட்டுவது போன்ற எளிய பயிற்சிகளே சரியானது என்றும், கடினமான உடற்பயிற்சிகளை உடனடியாகத் தொடங்குவது ஆபத்தானது எனவும் எச்சரிக்கின்றனர்.
முக்கியமாக முழுமையான மருத்துவ அனுமதிக்குப் பிறகே எடை தூக்கும் பயிற்சியை தொடங்க வேண்டும் எனவும், அளவுக்கு அதிகமான பளுவைச் சுமப்பதைத் தவிர்க்க வேண்டும் என்றும் தெரிவிக்கின்றனர்.
உடற்பயிற்சியின்போது நெஞ்சுவலி, வழக்கத்திற்கு மாறான மூச்சுத்திணறல், தலைசுற்றல் போன்ற அறிகுறிகள் தென்பட்டால் உடனே பயிற்சியை நிறுத்த வேண்டும் என்றும், மருத்துவர் நிர்ணயிக்கும் இலக்குகளை மட்டுமே பின்பற்ற வேண்டும் எனவும் வலியுறுத்துகின்றனர். சுருக்கமாகச் சொன்னால், சில வாரங்களில் மெதுவாக உடற்பயிற்சிகளைத் தொடங்கலாம்; ஆனால், ஜிம்முக்குச் செல்வதற்கு முன்பு உங்களை பரிசோதித்த இருதய நிபுணரின் முறையான அனுமதி பெறுவது கட்டாயம் என அறிவுறுத்துகின்றனர்.