\
AI
AIReuters

AI சொன்ன ஒரே ஒரு பொய்! சீனா - அமெரிக்கா இடையே போர்? AI-ஆல் மனித இனம் அழியுமா?

ஏ.ஐ சொன்ன ஒரேயொரு பொய்யால், அமெரிக்கா மற்றும் சீனா இடையே மிகப்பெரிய போர் ஏற்பட்டிருக்கூடும் என்று தகவல்கள் வெளியாகியுள்ளது.
Published on
Summary

மேற்கு ஆசிய கடலில் சீன கப்பல் அணு ஆயுத மூலப்பொருட்களை ஏற்றிச் செல்கிறது என AI chatbot வழங்கிய தவறான தகவலை நம்பி, அமெரிக்க ராணுவம் ஆய்வுக்கு தயாரான சம்பவம் நடந்துள்ளது.

செய்தியாளர் - கார்த்திகேயன்

மனித இனத்தை எதிர்காலத்தில் ரோபோக்கள் தான் ஆளப்போகிறது என்று, டெர்மினேட்டர் என்ற ஹாலிவுட் படம் உருவாக்கப்பட்டிருக்கும். இந்த திரைப்படத்தை பார்த்தபோது, இது வெறும் கற்பனையானது என்றே பலரும் கடந்து சென்றிருப்பார்கள். ஆனால், தற்போது தொடர்ந்து நடக்கும் பல்வேறு சம்பவங்கள் மூலம், ஒருவேளை இது எதிர்காலத்தில் உண்மை ஆகிவிடுமோ என்ற பயம், பொதுமக்கள் மத்தியில் எழத் தொடங்கி இருக்கிறது. அந்த அளவுக்கு, AI-க்களின் அட்டகாசம் தொடர்ந்து அதிகரித்துள்ளது.

இப்படியான சூழ்நிலையில், அமெரிக்கா, சீனா ஆகிய இரு உலகின் பேரரசு நாடுகளுக்கு இடையே, மிகப்பெரிய போர் ஏற்படவே, செயற்கை நுண்ணறிவு செயலிகள் காரணமாக அமைந்துள்ளதாக தகவல் வெளியாகி, பலரையும் அதிர்ச்சி அடைய வைத்துள்ளது. அதாவது, மேற்கு ஆசிய பகுதியில், அணு ஆயுத திட்டத்திற்கான மூலப்பொருட்களை கப்பல் மூலம் சீனா ஏற்றி செல்வதாக, அமெரிக்க ராணுவத்திற்கு தகவல்கள் கிடைத்துள்ளது.

America China
America ChinaReuters
AI
6 லட்சம் பேர்.. கையில் AK-47.. வீதியில் இறங்கிய பெண்கள்! ஈரானில் திடீர் பரபரப்பு!

எனவே, இந்த கப்பலில் ஏறி, சோதனை செய்வதற்காக, அமெரிக்க ராணுவ வீரர்கள் திட்டமிட்டிருந்தனர். அதற்காக, ராணுவ விமானங்களும் வான்வழியில் பறக்கத் தொடங்கியிருந்தன. ஆனால், அணு ஆயுத திட்டத்திற்கான மூலப்பொருட்களை சீனா கப்பலில் ஏற்றிச் சென்றதாக கிடைத்த உளவுத்துறை தகவல், பொய்யானது என்று இறுதி நேரத்தில் தெரியவந்துள்ளது. அந்த கப்பலின் ஆவணங்கள் குறித்த தகவல்களை, ஒரு AI Chatbot-யிடம் அரசின் ஆய்வாளர் ஒருவர் கேட்டதாகவும், அதற்கு அந்த ஏ.ஐ தவறான தகவல்களை வழங்கியதாகவும் கூறப்படுகிறது. இந்த தகவல்களை நம்பி, இதனை ஒரு வழக்கமான உளவுத்துறை அறிக்கையாக அந்த நபர் வெளியிட்டுள்ளார்.

ஆனால், இறுதி நேரத்தில் அது பொய் என்று தெரியவந்ததால், சீனாவின் கப்பலை அமெரிக்க ராணுவத்தினர் ஆய்வு செய்யவில்லை. ஒருவேளை ஆய்வு செய்திருந்தால், சீனாவுக்கும், அமெரிக்காவுக்கும் இடையே மிகப்பெரிய போர் ஏற்பட்டிருக்கும் என்று கூறப்படுகிறது. இந்த ஆண்டு தொடக்கத்தில் இந்த சம்பவம் நடந்த நிலையில், தற்போது தான் இந்த தகவல் ஊடகத்திற்கு தெரியவந்துள்ளது. அமெரிக்க அதிபராக டொனால்ட் டிரம்ப் பொறுப்பேற்றது முதல், உளவுத்துறையில் செயற்கை நுண்ணறிவு ஒருங்கிணைப்பை விரைவுபடுத்துமாறு தொடர்ந்து வலியுறுத்தப்பட்டு வருகிறது. எந்த இலக்குகளைத் தாக்குவது அல்லது இராணுவ தளவாடங்களை எங்கு நகர்த்துவது போன்ற கள முடிவுகளை இராணுவம் விரைவாக எடுக்க AI உதவும் என்பதற்காக, இந்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டது. ஆனால், இறுதியில் பெரும் போர் ஏற்படுவதற்கே, இது காரணமாக அமையும் என்று, அமெரிக்கா ராணுவத்தினர் எதிர்பார்த்திருக்க மாட்டார்கள்.

AI
’100 வயதைக் கடந்த 1 லட்சம் பேர்..’ வயதான மக்கள் தொகை நாடாக ஜப்பான்.. சாதனையா.? சவாலா.?
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com