Velvet Sundown pt web
சினிமா

பட்டிதொட்டியெல்லாம் வைரலாகும் Velvet Sundown.. காராணம் என்ன?

உலகெங்கும் பட்டிதொட்டியெல்லாம் பிரபலமாகி வரும் ’வெல்வெட் சன்டவுண்’ இசைக்குழு, தற்போது இணையத்தில் பேசுபொருளாகி வருகிறது. காரணம் என்ன தற்போது பார்க்கலாம்...

PT WEB

செய்தியாளர் சுஜாதா

பாட்டு பாடுறது, மியூசிக் போடுறது எல்லாம் மனுஷங்களுக்கு மட்டும்தான் வரும்னு நம்ம எல்லாம் நினைச்சிட்டு இருப்போம் ... ஆனா, ஒரு AI வந்து, என்ன பாஸ்.. நீங்க பெரிய அப்பாடக்கரா அப்படின்னு கேட்டு, ஒரு முழு MUSIC பாண்டையே (Band) உருவாக்கி, ஸ்பாட்டிஃபைகே டஃப் கொடுத்தா எப்படி இருக்கும்.. அந்த AI பாண்டோட பேருதான் 'வெல்வெட் சன்டவுண்'(Velvet Sundown)

கோடிக்கணக்கானவங்க ஸ்பாட்டிஃபைல இந்த பாட்டக் கேட்டு, அடடா சூப்பரா இருக்கே.. செம MUSIC னு சொல்லிட்டு இருந்தப்போ.. அந்த MUSIC Band-ல இருந்த முகத்தை பார்த்ததும் பலருக்கு டவுட் வந்திருக்கு.. என்னடா இது ஏஐ மாறியே இருக்கே... அப்போ இது ஏஐ போட்ட பாட்டா அப்படினு பலரும் சோசியல் மீடியால விமர்சனத்தை முன் வெச்சுட்டு வந்தாங்க..

அந்த விமர்சனத்திற்கு முற்றுப்புள்ளியா வந்த பதில் தான் எல்லோருக்கும் அதிர்ச்சி.. ஆமாங்க அது ஏஐ தான்னு அத உருவாக்குன University of the Aegean, University of Jyvaskyla சொல்லியிருக்கு..

மனிதர்கள் இல்லாமலேயே AI-யால பாட்டு போட முடியுமான்னு பார்க்குறதுதான் இவங்களோட திட்டம். அதுக்குன்னு ஒரு AI SOFTWARE-ய ரெடி பண்ணிருக்காங்க. அந்த AI, விதவிதமான பாட்டு வகைகளை கத்துக்கிட்டு, சும்மா சர சரன்னு புதுப் பாட்டுகளை போட ஆரம்பிச்சுருக்கு. பாடலோட வரிகள், மெலடி, எந்த இன்ஸ்ட்ருமென்ட் யூஸ் பண்றதுன்னு எல்லாமே AI-யே பார்த்துக்கிச்சு. இது சும்மா சாதாரண AI இல்ல, ஒரு ஸ்மார்ட்டான மியூசிக் டைரக்டர் மாதிரி..

வெல்வெட் சன்டவுண் பாட்டுகள் ரெடி ஆனதும், ஸ்பாட்டிஃபைக்கு லோட் பண்ணிட்டாங்க. இந்த பாட்டுகள் AI போட்டதுன்னு யாருக்குமே தெரியாது.. ஸ்பாட்டிஃபையில இதெல்லாம் மனுஷங்க போட்ட பாட்டுன்னு நினைச்சு, எல்லாரும் கேட்க ஆரம்பிச்சுட்டாங்க.

ஸ்பாட்டிஃபை அல்காரிதம்கள் கூட இதை ஒரு நார்மல் மியூசிக் பாண்டுனு நினைச்சு, இந்த பாட்டு நல்லா இருக்கு, கேட்டுப் பாருங்களேன்.. அப்படின்னு மில்லியன் கணக்கான பேருக்கு சிபாரிசு பண்ண ஆரம்பிச்சிருச்சு. அப்படிதான் 'வெல்வெட் சன்டவுண்' உலகமெங்கும் ஃபேமஸ் ஆச்சு.. AI-யும் மனுஷங்களுக்கு நிகரா, இல்லை, அதைவிட சூப்பரா பாட்டு போடும்னு இந்த சம்பவம் நிரூபிச்சுடுச்சு. இனிமே கச்சேரில AI வந்து பாடுனா ஆச்சரியப்படறதுக்கு இல்ல..

AI ஒரு பாட்டு போட்டா, அதோட காப்பிரைட் யாருக்கு போகும்? AI-க்கா? இல்ல அதை உருவாக்கினவங்களுக்கா? இந்த கேள்விதான் இப்ப பெரிய பஞ்சாயத்தா கிளம்பி இருக்கு... வக்கீலுங்க எல்லாம் மூளையை கசக்கிட்டு இருக்காங்க.