பவர் ஹவுஸ் லிரிக்கல் வீடியோ pt
சினிமா

’GENZ-ம் உன்ன பத்தி பேசுது..’ தரமான ‘Power House’ லிரிக்கல் வீடியோ! தளபதி ரிட்டர்ன்ஸ் ’கூலி’!

நடிகர் ரஜினியின் ‘கூலி’ திரைப்படத்தின் பவர் ஹவுஸ் பாடலின் லிரிக்கல் வீடியோ செம மாஸ்ஸாக வெளியாகியுள்ளது.

Rishan Vengai

தன்னுடைய வித்தியாசமான மேக்கிங் மூலம் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்த இயக்குநர் லோகேஷ் கனகராஜ், கமலை வைத்து ’விக்ரம்’ படத்தை இயக்கியதை தொடர்ந்து, ரஜினியை வைத்து ’கூலி’ திரைப்படத்தை இயக்கி முடித்துள்ளார்.

ஒரு தீவிரமான கமல் ரசிகர் ரஜினியை வைத்து என்னமாதிரியான கலவையை தயார் செய்துள்ளார் என்ற எதிர்ப்பார்ப்பே படத்திற்கு ஹைப் ஏற்றி உள்ளது.

லோகேஷ் கனகராஜ் - ரஜினிகாந்த்

கூலி திரைப்படம் ஆகஸ்ட் 14 தேதி திரையரங்கில் வெளியாகவுள்ள நிலையில், படம் குறித்து பேசியிருந்த இயக்குநர் லோகேஷ் கனகராஜ் ‘ரஜினியை வைத்து படம் செய்வதென்றால், அது தளபதி போல இருக்கவேண்டும் என ஆசைப்பட்டேன்’ என பேசியிருந்தார். அதேப்போல ரஜினியும் படத்தை பார்த்து தளபதியை நினைவுபடுத்தியதாக வாழ்த்தினார் என்றும் கூறியது வாழ்நாள் சாதனையாக இருந்தது என்றும் கூறியிருந்தார்.

கூலி

இந்நிலையில், தற்போது வெளியாகியிருக்கும் பவர் ஹவுஸ் பாடலின் லிரிக்கல் வீடியோ, லோகேஷ் கனகராஜ் ரஜினியின் தளபதி திரைப்படத்தின்மேல் எவ்வளவு காதலுடன் இருக்கிறார் என்பதை வெளிப்படையாக காட்டுகிறது. லிரிக்கல் வீடியோவில் ரஜினியின் ஒவ்வொரு புகைப்படமும் தளபதி ரெஃபரன்ஸாகவே இருக்கிறது.

வெறித்தனம் கூட்டும் பவர் ஹவுஸ் லிரிக்கல் வீடியோ..

லோகேஷ் கனகராஜ் மற்றும் ரஜினி காம்போவில் உருவாகியிருக்கும் கூலி திரைப்படம் ஆகஸ்ட் 14 தேதி திரையரங்கில் வெளியாகவுள்ளது. இப்படத்தில் நடிகர் ரஜினிகாந்த் உடன் சத்யராஜ், நாகார்ஜூனா, உபேந்திரா, சவுபின் சாஹிர், ஸ்ருதி ஹாசன் உள்ளிட்ட பல ஸ்டார் நடிகர்கள் நடித்துள்ளனர். அனிருத் இசையமைத்துள்ளார்.

இப்படத்தின் ஷூட்டிங் முடிவடைந்து டப்பிங் மற்றும் போஸ்ட் புரொடக்‌ஷன் பணிகள் சென்றுகொண்டிருக்கும் நிலையில், படத்தில் இருக்கும் ஒவ்வொரு பாடலாக வெளியாகி வருகிறது. அதன்படி முதலில் சிக்கிட்டு பாடல் வெளியான நிலையில், அதற்குபிறகு மோனிகா பாடல் வெளியாகி டிரெண்டிங்கில் இருந்துவருகிறது.

கூலி

இந்த இரண்டு பாடலின் லிரிக்கல் வீடியோவிலும் ரஜினியின் புகைப்படங்கள் இடம்பெறும் என காத்திருந்த ரசிகர்களுக்கு ஏமாற்றமே இருந்தது. அதற்கெல்லாம் டபுள் ட்ரீட் கொடுக்குமளவு ‘பவர் ஹவுஸ்’ லிரிக்கல் வீடியோவில் ரஜினியின் காட்சிகள் வெறித்தனமாக இடம்பெற்றுள்ளன.

கூலி

ஒரு பக்கம் ரஜினியின் ஒவ்வொரு காட்சியும் தளபதி, தீ, உழைப்பாளி, பாபா போன்ற படங்களை நினைவுபடுத்தும் வகையில் இடம்பெற்றுள்ளது. அப்படியே மறுபக்கம் ‘குழந்தை சிரிப்புல ஃபேஸ் தான், இமயமலை போல மாஸ் தான், மனச பறிக்குற க்ரேஸ் தான், GENZ-ம் உன்ன பத்தி பேசுதான், கூலி பவுர் ஹவுஸே, என்னைக்கும் குறையாத மவுஸே, உன்மேல இளசுங்களுக்கும், பெருசுங்களுக்கும், பொடிசுங்களுக்கும், பாமரனுக்கும், குமரிகளுக்கும் லவ்ஸு’ என இடம்பெற்றிருக்கும் வரிகள் ரஜினி ரசிகர்களுக்கு ட்ரீட்டாக அமைந்துள்ளது.

கூலி

முடிவில் ’பரட்டையின் பவர் ஹவுஸில் அரங்கம் அதிர்ந்து விசில் பறக்கவிருக்கிறது..’