’Sound-ஐ ஏத்து தேவா வர்றார்..’ ரஜினியின் பிறந்தநாள் ட்ரீட்டாக வெளிவந்த ’கூலி’ அப்டேட்!
ஜெயிலர், வேட்டையன் திரைப்படங்களை தொடர்ந்து நடிகர் ரஜினிகாந்த் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கித்தில் ’கூலி’ திரைப்படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தில் நடிகர் ரஜினிகாந்த் உடன் சத்யராஜ், நாகார்ஜூனா, உபேந்திரா, சவுபின் சாஹிர் உள்ளிட்ட பல மிகப்பெரிய ஸ்டார் நடிகர்கள் நடித்து வருகின்றனர். உடன் நடிகை ஸ்ருதி ஹாசனும் படத்தில் நடித்துவருகிறார்.
சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் இப்படத்திற்கு அனிருத் இசையமைத்திருக்கிறார். படம் அடுத்தாண்டு வெளியாகவிருக்கும் நிலையில், ரஜினியின் 74வது பிறந்தநாளை முன்னிட்டு புதிய அப்டேட்டை படக்குழு வெளியிட்டுள்ளது.
Sound-ஐ ஏத்து தேவா வர்றார்..
நடிகர் கமல்ஹாசனின் வெறித்தனமான ரசிகரான லோகேஷ் கனகராஜ், அவரை வைத்து ’விக்ரம்’ திரைப்படத்தை உருவாக்கி வசூல் ரீதியாக மிகப்பெரிய வெற்றி திரைப்படத்தை கொடுத்தார். அதற்குபிறகு அவருடைய இயக்கத்தில் வெளியாகவிருக்கும் அனைத்து படங்கள் மீதும் எதிர்ப்பார்ப்பு அதிகமானது.
தன்னுடைய வித்தியாசமான மேக்கிங் மூலம் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துவரும் இயக்குநர் லோகேஷ் கனகராஜ், கமலை வைத்து விக்ரம் என்ற மெகா ஹிட் திரைப்படத்தை கொடுத்தது போல, ரஜினியை வைத்து என்னமாதிரியான கலவையை தயார் செய்து வருகிறார் என்ற எதிர்ப்பார்ப்பு அதிகமாகமே இருந்துவருகிறது.
அதிலும் இப்படத்தில் நடிகர் சத்யராஜ், நாகர்ஜுனா, உபேந்திரா போன்றவர்கள் இணைந்தது மட்டுமில்லாமல் பாலிவுட் நடிகர் அமீர் கானும் கேமியோ ரோலில் நடிக்கவிருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
இந்நிலையில் லோகேஷ் கனகராஜ் பெரிய சம்பவத்தை ரஜினி ரசிகர்களுக்காக உருவாக்கிவருகிறார் என்ற ஆவல் இருந்துவரும் நிலையில், இன்று படத்தின் புதிய அப்டேட்டை படக்குழு வெளியிட்டுள்ளது.
வெளியாகியிருக்கும் புதிய அப்டேட்டின் படி, கூலி திரைப்படத்தில் இடம்பெற்றுள்ள Chikitu என்ற பாடலின் 57 செகண்ட்ஸ் கொண்ட வீடியோ வெளியிடப்பட்டுள்ளது. அதில் ரஜினி செம மாஸ்ஸாக, அவருக்கே உரிய ஸ்டைலுடன் அசத்தலான நடன அசைவுகளை வெளிப்படுத்தியுள்ளார். பார்ப்பதற்கு அவ்வளவு கூலாக உள்ளது இந்த கூலி படத்தின் பாடல் காட்சிகள். ரஜியின் பிறந்தநாளில் இந்த அப்டேட்டானது அவர்களுடைய ரசிகர்களுக்கு செம ட்ரீட்டாக அமைந்துள்ளது.