Rajinikanth, Vijay Sethupathi, LIK Jailer 2
கோலிவுட் செய்திகள்

`ஜெயிலர் 2'வில் VJS to நிவின் பாலியின் வெப் சீரிஸ் | இன்றைய டாப் 10 சினிமா செய்திகள் | Jailer 2

இன்றைய சினிமா செய்திகளில் ஜெயிலர் 2வில் விஜய் சேதுபதி, `LIK', `வா வாத்தியார்' படங்களின் புதிய பாடல்கள் உட்பட பல சுவையான டாப் 10 சினிமா செய்திகள் இடம்பெற்றுள்ளன.

Johnson

`ஜெயிலர் 2'வில் விஜய் சேதுபதி?

Jailer 2

ரஜினிகாந்த் நடிப்பில் நெல்சன் திலீப்குமார் இயக்கும் `ஜெயிலர் 2' படத்தில் விஜய் சேதுபதி நடிக்கப்போவதாக தகவல். இதற்கு முன் பேட்ட படத்தில் விஜய் சேதுபதி ரஜினியுடன் இணைந்து நடித்தது குறிப்பிடத்தக்கது.

`வா வாத்தியார்' படத்தின் புதிய பாடல்!

நலன் குமாரசாமி இயக்கத்தில் கார்த்தி நடித்துள்ள `வா வாத்தியார்' படத்திலிருந்து Aalapikkey Ummak பாடல் வெளியீடு.

LIK Second Punch

விக்னேஷ் சிவன் இயக்கத்தில் பிரதீப் ரங்கநாதன், க்ரித்தி ஷெட்டி நடித்துள்ள `LIK' படத்தின் இரண்டாவது சிங்கிளாக `பட்டுமா' பாடல் வெளியீடு.

`லாக்டவுன்' பட டிரெய்லர்

அனுபமா பரமேஸ்வரன் நடித்துள்ள `லாக்டவுன்' படத்தின் டிரெய்லர் வெளியீடு. இப்படம் டிசம்பர் 5ம் தேதி திரையரங்கில் வெளியாகவுள்ளது.

விஜய் மில்டனின் Gods & Soldiers

விஜய் மில்டன் இயக்கத்தில் உருவாகியுள்ள Gods & Soldiers படத்தின் அறிமுக வீடியோ வெளியீடு. இந்தப் படத்தின் மூலம் தெலுங்கு நடிகர் ராஜ் தருண் தமிழில் அறிமுகமாகிறார். சுனில், பரத், ஆரி, அம்மு அபிராமி உள்ளிட்ட பலர் இதில் நடித்துள்ளார்.

ஹீரோவான மகேஷ்பாபுவின் அண்ணன் மகன்

Srinivasa Mangapuram

`RX 100', `மங்களவாரம்' படங்களை இயக்கிய அஜய் பூபதி, மகேஷ்பாபுவின் அண்ணன் ரமேஷ்பாபுவின் மகன் ஜெய கிருஷ்ணா இயக்கும் படத்திற்கு `ஸ்ரீனிவாச மங்கபுரம்' எனப் பெயரிடப்பட்டுள்ளது. இந்தப் படத்தின் மூலம் ரவீனா டாண்டன் மகள் ராஷா தடானி தெலுங்கு சினிமாவில் அறிமுகமாகிறார்.

வெப் சீரிஸில் நிவின் பாலி!

நிவின் பாலி நடிப்பில் அருண் இயக்கியுள்ள வெப் சீரிஸ் `Pharma'. இதன் டீசர் தற்போது வெளியாகி இருக்கிறது.

ராதிகா ஆப்தே, அனுராக் காஷ்யப் நடித்துள்ள `Saali Mohabbat'

நடிகை டிஸ்கா சோப்ரா இயக்குநராக அறிமுகமாகும் படம் `Saali Mohabbat'. ராதிகா ஆப்தே, அனுராக் காஷ்யப் நடித்துள்ள இந்தப் படம் டிசம்பர் 12ம் தேதி ஸீ5 தளத்தில் வெளியாகிறது.

`Tumbbad' இயக்குநரின் அடுத்த படம்

Mayasabha

`Tumbbad' படம் மூலம் கவனம் ஈர்த்த ராஹி அணில் இயக்கியுள்ள அடுத்த படம் `Mayasabha' ஜனவரி 16ம் தேதி வெளியாகும் என அறிவிப்பு.

உருவாகிறது `Rush Hour 4'

Rush Hour 4

ஜாக்கி சான் (Jackie Chan), கிறிஸ் டுக்கர் (Chris Tucker) நடிப்பில் பிரெட் ராட்னர் (Brett Ratner) மூன்று பாகங்களாக இயக்கிய படம் `Rush Hour'. இந்தப் படத்தின் 4வது பாகம் விரைவில் இதே கூட்டணியில் உருவாக உள்ளதாம்.