Vadivelu web
கோலிவுட் செய்திகள்

மீண்டும் வக்கீல் ரோலில் நடிக்கும் வடிவேலு! | Vadivelu | Pormuzhakam

இப்படத்தில் வடிவேலுவுடன், சமுத்திரக்கனியும் முக்கியமான பாத்திரத்தில் நடிக்க உள்ளதாக சொல்லப்படுகிறது. விரைவிலேயே இப்படத்தின் படப்பிடிப்பு துவங்க உள்ளதாம்.

Johnson

'போர்முழக்கம்' லீகல் த்ரில்லர் படத்தில், வடிவேலு வக்கீலாக நடிப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

வடிவேலு நடிப்பில் தயாராகும் புதிய படம் விரைவில் துவங்கவுள்ளது. `போர்முழக்கம்' என்ற லீகல் த்ரில்லர் படத்தில் வக்கீலாக நடிக்கிறார் வடிவேலு. இப்படத்தை ஏபி பினில் இயக்குகிறார், இவர் ஸ்ரீநாத் பாசி நடிப்பில் 2025ம் ஆண்டு வெளியான 'பொங்கலா' என்ற மலையாள படத்தின் மூலம் அறிமுகமானார்.

ஒரு அரசியல் பின்புலம் கொண்ட கொலை வழக்கை விசாரிக்கும் போது வரும் சிக்கல்களை மையமாக வைத்து இப்படம் உருவாகவுள்ளது. இப்படத்தில் வடிவேலுவுடன், சமுத்திரக்கனியும் முக்கியமான பாத்திரத்தில் நடிக்க உள்ளதாக சொல்லப்படுகிறது. விரைவிலேயே இப்படத்தின் படப்பிடிப்பு துவங்க உள்ளதாம். இப்படம் பற்றி இயக்குநர் பினில் தன்னுடைய இன்ஸ்ட்டா பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

வடிவேலு கடைசியாக சுதீஷ் சங்கரின் மாரீசனில் ஃபஹத் பாசிலுடன் இணைந்து நடித்தார். இதனையடுத்து பிரபுதேவாவுடன் `பேங் பேங்' படத்தில் நடித்து வருகிறார். அப்படத்துக்கு பிறகு இந்த `போர்முழக்கம்' படத்தில் இணைவார் என எதிர்பார்க்கப்படுகிறது.