Riya Shibu Chiyaan 63
கோலிவுட் செய்திகள்

`சியான் 63'யில் இணைந்த DELULU! | Chiyaan 63 | Vikram | Riya Shibu

ரியா ஏற்கெனவே நிவின் பாலியுடன் நடித்த `சர்வம் மாயா' படத்தில் டெலுலு பாத்திரத்தில் நடித்து பிரபலமானவர். அதற்கு முன்பு இன்ஸ்ட்டாவில் இவருக்கு என பெரிய ரசிகர் பட்டாளம் உண்டு.

Johnson

விக்ரம் – ஆனந்த் ஷங்கர் கூட்டணி ‘இருமுகன்’க்கு பிறகு மீண்டும் இணையும் ‘சியான் 63’ படத்தை சத்யா ஜோதி நிறுவனம் தயாரிக்கிறது. தயாரிப்பாளர் ஷிபு தமீம்ஸின் மகள் ரியா ஷிபு, டெலுலு கதாபாத்திரத்தால் அறிமுகமானவர், இங்கு முக்கிய வேடத்தில் நடிக்கிறார். ஊர்வசி, எம்.எஸ்.பாஸ்கர் ஆகியோரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கும் இந்த படம், ஜூன் முதல் வாரம் முதல் சென்னையில் தொடர்ந்து 50 நாட்கள் படமாக்கப்படுகிறது.

விக்ரம் நடிப்பில் ஆனந்த் ஷங்கர் இயக்கத்தில் துவங்க உள்ளது `Chiyaan 63' படம். இப்படத்தின் அறிவிப்பு விக்ரம் பிறந்தநாளை முன்னிட்டு ஏப்ரல் 17ம் தேதி வெளியானது. சத்யா ஜோதி நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாகும் இப்படத்தின் வீடியோ புரோமோ ஒன்றும் வெளியிடப்பட்டது. இருமுகன் படத்திற்கு அடுத்து இரண்டாவது முறையாக இப்படத்தில் இணைந்துள்ளது விக்ரம் - ஆனந்த் ஷங்கர் கூட்டணி.

delulu

இந்தப் படத்தில் தயாரிப்பாளர் ஷிபு தமீம்ஸின் மகளும், `வீர தீர சூரன்' பட தயாரிப்பாளருமான ரியா ஷிபு ஒரு பாத்திரத்தில் நடிக்க உள்ளதாக சொல்லப்பட்டு வந்தது. தற்போது அதனை அதிகாரப்பூர்வமாகவே அறிவித்துள்ளனர். ரியா ஏற்கெனவே நிவின் பாலியுடன் நடித்த `சர்வம் மாயா' படத்தில் டெலுலு பாத்திரத்தில் நடித்து பிரபலமானவர். அதற்கு முன்பு இன்ஸ்ட்டாவில் இவருக்கு என பெரிய ரசிகர் பட்டாளம் உண்டு.

சியான் 63யில் ரியாவுக்கு ஒரு முக்கிய பாத்திரம் தான், ஆனால் ஹீரோயின் வேடமில்லை என சொல்லப்படுகிறது. மேலும் முக்கியமான ரோலில் ஊர்வசி, எம்.எஸ்.பாஸ்கர் ஆகியோரும் நடிக்க உள்ளனர். முதலில் இப்படத்தின் ஷூட்டிங் மே முதல் வாரத்தில் துவங்கும் என சொல்லப்பட்டது. இப்போது ஜூன் முதல் வாரத்தில் படப்பிடிப்புக்கு கிளம்புகின்றனர் என தகவல். பரபரப்பாக முழு படத்தின் ஷூட்டிங்கும் சென்னையில் தான் நடைபெற உள்ளதாம். தொடர்ந்து 50 நாட்களுக்கு மேல் விக்ரம் தேதிகள் ஒதுக்கி கொடுத்திருப்பதாக சொல்கிறார்கள்.