R J Balaji Karuppu
கோலிவுட் செய்திகள்

`கருப்பு' ட்ரெய்லர் வெளியாகாதது ஏன்? - ஆர் ஜே பாலாஜி விளக்கம் | R J Balaji | Suriya | Karuppu

அடுத்த வாரம் இதே நேரம் (மே 14) `கருப்பு' படத்தை வெளியிட வேலைகளை மும்முரமாக செய்து வருகிறோம். அப்போ படத்துக்கு முன்பு ட்ரெய்லர் வர வேண்டும் அல்லவா, ட்ரெய்லர் ரெடி. உங்களுக்கு செமயாக பிடிக்கும் என நம்புகிறேன்.

Johnson

சூர்யா நடிப்பில் ஆர்.ஜே.பாலாஜி இயக்கியுள்ள படம் `கருப்பு'. இப்படத்தில் த்ரிஷா, ஸ்வாசிகா, ஷிவதா, இந்திரன்ஸ், யோகிபாபு எனப் பலர் நடித்துள்ளனர். இந்தப் படம் மே 14ஆம் தேதி வெளியாக உள்ள நிலையில் இப்படத்திற்கு திரைப்பட சான்றிதழ் கிடைத்துள்ளது. விரைவில் இப்படத்தின் ட்ரெய்லர் வெளியாகும் என பதிவிட்டிருந்தார் ஆர் ஜே பாலாஜி. படம் இன்னும் ஒரு வாரத்தில் வெளியாகவுள்ள நிலையில் இன்னும் ட்ரெய்லர் பற்றிய அறிவிப்பு வெளியாகவில்லை. இந்தசூழலில் தான், படத்தின் இயக்குநர் ஆர் ஜே பாலாஜி, டிரெய்லர் வெளியாகாதது குறித்து விளக்கம் அளித்து வீடியோ வெளியிட்டுள்ளார்.

அந்த வீடியோவில் "அடுத்த வாரம் இதே நேரம் (மே 14) `கருப்பு' படத்தை வெளியிட வேலைகளை மும்முரமாக செய்து வருகிறோம். அப்போ படத்துக்கு முன்பு ட்ரெய்லர் வர வேண்டும் அல்லவா, ட்ரெய்லர் ரெடி. உங்களுக்கு செமயாக பிடிக்கும் என நம்புகிறேன். ஆனால், நம்மை சுற்றி நடக்கும் நிறைய அரசியல் நிகழ்வுகள் இருக்கிறதே. நாம் எல்லாம் ஆசையாக ஓட்டு போட்டு ஒரு விஷயம் நடந்ததே என மகிழ்ச்சியாக இருந்த பொது எதிர்பாராத பல திருப்பங்கள்.

இந்த திருப்பங்கள் எல்லாம் முடிந்து நாம் எதிர்பார்த்த விஷயங்கள் நடக்கட்டும். அதற்கு நாம் எல்லாம் வேண்டிக் கொள்வோம். அது நடக்கும் வரையில் என்ன நடக்கிறது என பார்ப்போம். நாம் ட்ரெய்லரை விட்ட பின்னர் அரசியல் சூழல் காரணமாக அது கவனிக்கப்படாமல் போக கூடாது என காத்திருக்கிறோம். சீக்கிரமே ஒரு தெளிவு பிறக்கட்டும். உங்களுக்கு பிடித்த மாதிரி ஒரு ட்ரெய்லர், வெரப்பா Ext, பின்னர் உங்களுக்கு பிடித்தது போல படம், அதை வெளியிடும் வேலைகளில் இருக்கிறோம். சீக்கிரம் அடுத்த கட்ட நடவடிக்கையுடன் உங்களை சந்திக்கிறேன். கருப்பன் கூட இருக்கிறான், கூடவே வருவான், நம்மை நன்றாக பார்த்துக் கொள்வான்." எனப் பேசியுள்ளார்.