Trisha
TrishaPsilovibin

Psilovibin ம்யூசிக் வீடியோவில் த்ரிஷா! | Paal Dabba | Trisha

2024ல் வெளியிட்ட `காது மேல' ம்யூசிக் வீடியோ மிகப்பெரிய வரவேற்பை பெற்றது. தனி இசைப்பாடல்கள் போலவே சினிமாவிலும் பல புகழ்பெற்ற பாடல்களை பாடியுள்ளார் பால் டப்பா.
Published on

பிரபல ராப் பாடகர் பால் டப்பா. 2022லிருந்து பாடல்கள் பாடி வரும் இவர் 2024ல் வெளியிட்ட `காது மேல' ம்யூசிக் வீடியோ மிகப்பெரிய வரவேற்பை பெற்றது. தொடர்ந்து Torrie Wilson- Red Bull 64 Bars, D.A.T.N. with Brodha V, Vibe என பாடல்களை பாடி வெளியிட்டார்.

தனி இசைப்பாடல்கள் போலவே சினிமாவிலும் பல புகழ்பெற்ற பாடல்களை பாடியுள்ளார் பால் டப்பா. `துருவ நட்சத்திரம்' படத்தில் His Name is John, `ஆவேஷம்' படத்தில் Galatta, பிரதர் படத்தில் Makkamishi, அஜித்தின் `குட் பேட் அக்லி' படத்தில் God Bless U, மணிரத்னம் இயக்கிய `தக் லைஃப்' படத்தில் O Maara, பிரதீப் ரங்கநாதனின் `ட்யூட்' படத்தில் ஊறும் ப்ளட், சூர்யாவின் `கருப்பு' படத்தில் ராத்து ராசன் எனப் பல பாடல்களை பாடியுள்ளார்.

Trisha
"தாங்க முடியாத வெப்பத்திலும் விஜய் எடுத்த முடிவு.." - ஸ்ரேயா சரண் பகிர்ந்த விசயம்

தற்போது இவர் Psilovibin என்ற புது ம்யூசிக் வீடியோவை வெளியிட்டுள்ளார். Foxn இசையமைத்துள்ள இந்தப் பாடலுக்கு வரிகள் எழுதி, பாடி, வீடியோவை இயக்கியுள்ளார் பால் டப்பா. இந்த ம்யூசிக் வீடியோவில் பிரபல நடிகை த்ரிஷா ஒரு கெஸ்ட் ரோலில் வந்து சர்ப்ரைஸ் தந்திருக்கிறார். 

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com