சற்குணம் இயக்கத்தில் அதிதிபாலன், துஷாரா விஜயன் நடித்துள்ள சீரிஸ் `Exam'. போட்டி தேர்வுகளின் நடக்கும் முறைகேடுகள் பற்றி பேசும் கதை.
சைஃப் அலிகான் நடித்துள்ள படம் `Kartavya'. காவலதிகாரி ஒருவருக்கு குடும்பமா, கடமையா என்ற சூழல் ஏற்பட அதன் பின் என்ன ஆகிறது என்பதே கதை.
ஸ்ரீ செந்தில் இயக்கத்தில் பரத் நடித்துள்ள படம் `காளிதாஸ் 2'. நகரத்தில் நடக்கும் பல கொலைகளை செய்பவன் யார் என்ற விசாரணையே கதை.
ரதீஷ் பொடுவல் இயக்கிய படம் `Oru Durooha Saahacharyathil'. ஆரம்ப சுகாதார நிலையத்தில் பணியாற்றும் ஹீரோ வீட்டில் தஞ்சம் புக சிலர் வருகிறார்கள். அதன் பின் நடக்கும் கலாட்டாக்களே கதை.
சூர்யா நடிப்பில் ஆர் ஜே பாலாஜி இயக்கியுள்ள படம் `கருப்பு'. அநீதிக்கு எதிராக நீதிபோராட்டத்தை நடத்தும் ஹீரோவின் கதை.
ஜெய், மீனாட்சி கோவிந்தராஜன் நடித்துள்ள படம் `சட்டென்று மாறுது வானிலை'. அமைச்சரின் மகளை திருமணம் செய்து கொள்ளும் ஹீரோ வாழ்க்கையில் அதன் பின் நடக்கும் கலாட்டாக்களே கதை.
மாஸ்டர் மகேந்திரன் நடித்துள்ள படம் `கரா'. முதலையை மையப்படுத்திய த்ரில்லர் படமாக உருவாகியுள்ளது.
பேசில் ஜோசப், டொவினோ தாமஸ் நடித்துள்ள படம் `Athiradi'. நிறுத்தப்பட்டிருந்த கல்லூரி விழாவை மீண்டும் ஒரு மாணவர் துவங்க, அதன் பின் வெடிக்கும் பிரச்சனைகளே கதை.
சஞ்சய் தத் நடித்துள்ள படம் `Aakhri Sawal'. தன் ஆசிரியர் மீது ஒரு மாணவன் வைக்கும் குற்றச்சாட்டும், அதை தொடர்ந்து எழும் சர்ச்சைகளுமே கதை.
ஆயுஷ்மான் குரானா, சாரா அலிகான், வாமிகா கபி நடித்துள்ள படம் `Pati Patni Aur Woh Do'. கணவன் மனைவி வாழ்க்கை இடையே வரும் சிக்கல்களே கதை.
Damian McCarthy இயக்கியுள்ள படம் `Hokum'. ஹாரர் கதை எழுத்தாளர் ஐரிஷ் ரெசார்ட் ஒன்றில் தங்க செல்கிறார், அதன் பின் நடக்கும் அமானுஷ்ய நிகழ்வுகளே கதை.