மீரா கதிரவன் இயக்கத்தில், கஸ்தூரி ராஜா நடிப்பில் உருவான ‘ஹபீபி’ திரைப்படம் இஸ்லாமிய குடும்ப பின்னணியை மையமாகக் கொண்டு உருவாகியுள்ளது. சாம் சி.எஸ். இசையமைத்த இந்த படம், CBFC சான்றிதழ் பணிகளை வெற்றிகரமாக முடித்து ‘யூ’ சான்றிதழைப் பெற்றுள்ளது. குடும்பத்துடன் பார்க்க ஏற்ற நல்லுணர்வு, நேர்மறை மதிப்புகள் நிறைந்த தரமான படைப்பாக அதிகாரிகள் பாராட்டியுள்ளனர்.
`அவள் பெயர் தமிழரசி', `விழித்திரு' போன்ற படங்களை இயக்கியவர் மீரா கதிரவன். இவர் தற்போது கஸ்தூரி ராஜா நடிப்பில் `ஹபீபி' என்ற படத்தை இயக்கியுள்ளார். மகேஷ் முத்துசுவாமி ஒளிப்பதிவு செய்துள்ள இப்படத்திற்கு சாம் சி எஸ் இசையமைத்துள்ளார். இஸ்லாமிய குடும்பப் பின்னணியை மையமாக வைத்து உருவாகியுள்ளது இப்படம்.
இப்படம் தற்போது CBFC பணிகளை வெற்றிகரமாக நிறைவு செய்து, 'யூ’ சான்றிதழைப் பெற்றுள்ளது. மேலும், நல்லுணர்வுகளும் நேர்மறை மதிப்புகளும் நிறைந்த குடும்பத்துடன் பார்க்கக்கூடிய தரமான படைப்பாக இப்படத்தை உருவாக்கியதற்காக படக்குழுவினரை அதிகாரிகள் பாராட்டியுள்ளனர். இப்படம் குறித்து நல்ல எதிர்பார்ப்புகள் இருக்கும் சூழலில் ரோமியோ பிக்சர்ஸ் ராகுல், உலகம் முழுவதும் ‘ஹபீபி’ திரைப்படத்தை வெளியிட முன்வந்துள்ளது.
இந்தப் படத்திற்கு, இசையமைப்பாளர் சாம் சி.எஸ். உணர்வுகளை ஆழமாகத் தொட்டுச் செல்லும் இசையை கொடுத்துள்ளார். குறிப்பாக, 'வல்லோனே...' பாடலுக்காக மறைந்த புகழ்பெற்ற பாடகர் நாகூர் இ.எம். ஹனிபாவின் குரலை செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தின் மூலம் மீண்டும் உருவாக்கியிருப்பது கவனம் ஈர்த்தது. இப்படத்தின் வெளியீட்டு தேதியை தயாரிப்பாளர்கள் விரைவில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவுள்ளனர்.