விடுதலை 2 - சீமான் pt
சினிமா

“அந்த வசனத்தை மட்டும் ஏன் பேசுறீங்க; விடுதலை 2ம் பாகத்தில் அவ்வளவு விஷயம் இருக்கு” - சீமான் புகழாரம்

விடுதலை 2 படத்தை பார்த்த பிறகு செய்தியாளர்களை சந்தித்து பேசிய நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான், விடுதலை 2 படம் சமூகத்திற்கான படம் மட்டுமல்ல பாடம் என்று கூறினார்.

PT WEB

வெற்றிமாறன் இயக்கத்தில் விஜய் சேதுபதி வாத்தியார் என்ற கதாபாத்திரத்திலும், சூரி அவரை விரட்டிப்பிடிக்கும் போலீஸ் கான்ஸ்டபிளாகவும் விடுதலை பாகம் 1 படத்தின் கதை அமைந்திருக்கும். முதல் பாகம் முழுவதையும் தனியொரு ஆளாக தோளில் சுமந்திருந்த சூரியின் நடிப்பு, இரண்டாம் பாகத்திற்கு தேவையான தாக்கத்தை கச்சிதமாக கொண்டுவந்து முடிவில் சேர்த்திருக்கும். அவரின் அசத்தலான நடிப்பு ரசிகர்கள் எல்லோராலும் பாராட்டப்பட்டது. ஒட்டுமொத்தமாக சினிமா ரசிகர்களுக்கு ஒரு செம ட்ரீட்டாக அமைந்த விடுதலை பாகம் 1 திரைப்படத்தின் நீட்சியாக ”விடுதலை 2” திரைப்படம் தற்போது வெளியாகியுள்ளது. விமர்சன ரீதியாக நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

விடுதலை 2 திரைப்படத்தை அரசியல் தலைவர்கள் பலரும் பார்த்து கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். ஏற்கனவே விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் இந்தப் படம் வெகுவாக பாராட்டி இருந்த நிலையில் தற்போது நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் பார்த்துள்ளார். விடுதலை 2 படத்தை பார்த்த பிறகு செய்தியாளர்களை சந்தித்து பேசிய சீமான், விடுதலை 2 படம் சமூகத்திற்கான படம் மட்டுமல்ல பாடம் என்று கூறினார்.

செய்தியாளர் சந்திப்பில் அவர் பேசியது பின்வருமாறு:-

சமூகத்திற்கான படம், பாடம்தான்  விடுதலை 2!

vetrimaran

விடுதலை 2ம் பாகம் ஒரு படம் என்று சொல்வதை விட அடக்கப்பட்ட, ஒடுக்கப்பட்ட மக்கள் போராடினால் தான் உரிமையை கொஞ்சம் மேனும் காக்க முடியும் என்பதற்கான குறியீடு. மொத்த மானுட சமூகத்திற்கான படமாக, பாடமாக, புதினமாக இதனை பார்க்க வேண்டும். ஒடுக்கப்பட்ட அடக்கப்பட்ட அனைத்து மக்களுக்குமான தத்துவமாக விடுதலை படம் உள்ளது. நடைமுறையில் உள்ள அரசியல் நிலவரத்தை பேசியுள்ளனர்.

விஜய்சேதுபதிக்கு இது வரலாற்றுப் படம்..

விஜய் சேதுபதி

என் உணர்வுடன் 100 சதவீதம் பொருந்தும் படமாக உள்ளது. எந்த தத்துவமும் தடுமாறி வீழும் போது புதிய தத்துவம் பிறக்கும். இளையராஜா அசாத்தியமான இசையை படைத்துள்ளார். தனிமனிதனை அபிமானமாக கொண்டு செயல்பட கூடாது. நடிகர் விஜய் சேதுபதிக்கு இது வரலாற்று படமாக இருக்கும்.

தத்துவமே தலைமை!

தத்துவத்தை அடிப்படையாக கொண்டு தான் செயல்பட வேண்டும். அபிமானத்தின் அடிப்படையில் தனிமனிதனை தலைமை ஏற்க கூடாது. தத்துவத்தை தான் தலைமையாக ஏற்க வேண்டும்.

அப்படினா ஏன் தனியா கட்சி ஆரமிக்கணும்?

தனியாக நின்று வெல்ல முடியாது என்பது சமரசம். கூட்டணி வைக்க வேண்டும் என்றால் ஏன் தனியா கட்சி ஆரமிக்க வேண்டும். ஒரே கட்சியாக இருந்து விட்டு போகலாமே. கொள்கை வேறு, கூட்டணி வேறு என்பது ஏமாற்று வேலை. அரசியலுக்காது,கட்சிக்காக கூட்டணி வைத்தால் மக்கள் நலன் எப்படி இருக்கும். கோட்பாட்டை முன் வைத்து போராடினால் தான் ஏற்று கொள்வதா, மறுப்பதா என மக்கள் முடிவு செய்வார்கள்.

NTK Seeman

மொழிப்பற்று, இனப்பற்று மறுக்கப்பட்டு சாதி போதை இங்கு உருவாகப்பட்டுள்ளது. தமிழகத்தில் உள்ள இடது சாரிகளுக்கு ஜோசப் ஸ்டாலினுக்கும், மு க ஸ்டாலின் க்கும் வித்தியாசம் தெரியாது” என்றார்.