விடுதலை 2 படம் வெளியாகி 25 நாட்கள் கடந்து ஓடிக் கொண்டிருப்பதை குறிப்பிட்டு அதற்கு நன்றி அறிவிப்பை வெளியிட்டுள்ளது தயாரிப்பு நிறுவனம் ஆர்.எஸ். இன்போடைன்மெண்ட். அதில் அவர்கள் தயாரிக்கும் அடுத்த இரு படங்களின் அறிவிப்பையும் வெளியிட்டுள்ளனர்.
இயக்குநர் வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ் நடிக்கும் படம் அதில் ஒன்று. பொல்லாதவன், ஆடுகளம், வடசென்னை, அசுரன் என நான்கு வெற்றி படங்களை கொடுத்த கூட்டணி ஐந்தாவது முறையாக இணைகிறது. விடுதலை 2 வெற்றிமாறனின் 7வது படம். அவரின் 9வது படத்தில் தனுஷ் நடிக்க உள்ளார். எனவே வாடிவாசல் படத்திற்கு பின்பே தனுஷ் - வெற்றிமாறன் கூட்டணி இணையும் எனது தெரிகிறது.
அடுத்த படம் சூரி நடிப்பில் மதிமாறன் புகழேந்தி இயக்கம் படம். வெற்றிமாறனின் இயக்குநர் குழுவில் முக்கிய உறுப்பினர் மற்றும் ஜிவி பிரகாஷ், கௌதம் மேனன் நடிப்பில் செல்ஃபி படத்தின் இயக்குநர் தான் மதிமாறன் புகழேந்தி. இப்படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்க இருக்கிறது.