தெலுங்கு முன்னணி நடிகர் ராம் போதினேனி, தனது 23வது படமான RAPO23 மூலம் இயக்குநராக அறிமுகமாகிறார். சகோதரர் கிருஷ்ணா போதினேனி தயாரிப்பில், Rapo Cinematics பேனரில் உருவாகும் இந்த படம், ஸ்டைலிஷ் சைக்கலாஜிக்கல் ஆக்ஷன் த்ரில்லர். ‘வீரா’ என்ற புதிய அவதாரத்தில் ராம் நடிக்கும் இந்த படம், ஜூனில் படப்பிடிப்பு தொடங்கி டிசம்பரில் வெளியீடு பெற திட்டமிடப்பட்டுள்ளது.
தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகர் ராம் போதினேனி. நடிகராக பல படங்கள் மூலம் கவர்ந்து வந்த ராம் அவரது முந்தைய படமான ஆந்திரா கிங் தாலுகா படத்தில் பாடல் வரிகளை எழுதி பாராட்டைப் பெற்றதுடன், முதன்முறையாக பின்னணிப் பாடகராகவும் ரசிகர்களை ஆச்சரியப்படுத்தினார்.
இப்போது அவர் தனது 23வது படத்தில் நடிப்பதுடன், அப்படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமாக உள்ளார். ராமின் சகோதரர் கிருஷ்ணா போதினேனி தயாரிப்பில், Rapo Cinematics பேனரில் இப்படம் தயாராகிறது. இன்று ராம் போதினேனி பிறந்தநாளை முன்னிட்டு, இப்படத்தில் ‘வீரா’ கதாபாத்திரத்தை அறிமுகப்படுத்தும் போஸ்டர் வெளியாகியுள்ளது.
RAPO23, திரைப்படம், ஸ்டைலிஷ் சைக்கலாஜிக்கல் ஆக்ஷன் த்ரில்லராக உருவாக உள்ளது. மேலும், ‘வீரா’வாக இதுவரை இல்லாத புதிய அவதாரத்தில் ராம் நடிக்க உள்ளாராம். படத்தின் ஷூட்டிங் ஜூன் மாதத்தில் தொடங்கவுள்ளது. இந்த ஆண்டு டிசம்பர் மாதத்தில் படத்தை வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளனர்.