சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மற்றும் இயக்குநர் லோகேஷ் கனகராஜ், பின்னணி இசை அனிருத் என ஒரு மாஸ் காம்போவில் உருவாகியிருக்கும் படம் ’கூலி’. இப்படத்தில் நடிகர் ரஜினிகாந்த் உடன் சத்யராஜ், நாகர்ஜுனா, உபேந்திரா, சௌபின் சாஹிர், அமீர் கான் உள்ளிட்ட பல திரை சூப்பர் ஸ்டார்களும் நடித்துள்ளனர். மேலும், நடிகை பூஜா ஹெக்டே மோனிகா என்ற பாடலுக்கு நடனமாடியுள்ளார்.
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்த படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்திருக்கும் நிலையில், படம் வரும் 14ஆம் தேதி ரிலீஸ் ஆகவுள்ளது. இப்படத்திற்கான புக்கிங் ஓப்பனாகி உள்ள நிலையில், புக்கிங்கில் சாதனை படைத்துவருகிறது கூலி.
இந்நிலையில் கூலி திரைப்படம் குறித்த அப்டேட்கள் வெளியாகி படத்தின் மீதான எதிர்ப்பார்ப்பை அதிகரித்து வருகின்றன.
கூலி திரைப்படம் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ஒரு சிறந்த ஸ்க்ரீன்பிளே படமாக இருக்கும் என கூறப்படும் நிலையில், படத்தின் டீசரில் கதை குறித்த எந்த பிளாட்டையும் ஓப்பன் செய்யாமல் ரஜினியின் ஒரு டிரான்ஸ்ஃபர்மேஷன் காட்சியோடு முடித்திருந்தனர். அதுவே ரசிகர்களுக்கு புத்துணர்ச்சியை ஏற்படுத்திய நிலையில், ஒரு கமல் ரசிகர் ரஜினியை எப்படியான திரைமொழியில் காண்பித்திருக்கிறார் என்பதே கூலி படம் எப்படி இருக்கும் என்ற எதிர்ப்பார்ப்பை எகிறிச்செய்துள்ளது.
இந்நிலையில் கூலியின் படப்பிடிப்பு குறித்து பேசியிருக்கும் கூலி படத்தின் ஒரு பகுதியாக இருக்கும் ரைட்டர் சந்துரு, ரஜினி பேசும் ஒரு இடம் தியேட்டரே பிளாஸ்ட் ஆகும் என்று தெரிவித்துள்ளார்.
சமீபத்திய நேர்காணல் ஒன்றில் பேசியிருக்கும் அவர், “நீண்டநேரம் பேசக்கூடிய மோனோலாக் டயலாக் போர்சன் படப்பிடிப்புக்கும் சிறிது நேரத்திற்கு முன்புதான் கொடுக்கப்பட்டது. 3 நிமிடங்கள் வரை பேசக்கூடிய 7 பக்க உரையாடல் அது. அவ்வளவு நீளமான வசனத்தில் பல எமோசன்கள் இருந்தன, அதை ஒரே டேக்கில் அடித்தார் ரஜினிகாந்த். அவர் நினைத்திருந்தால் நிறுத்தியிருக்கலாம், ஆனால் அதற்குள் இருந்த அத்தனை எமோசனையும் அவருடைய ஸ்டைலில் கொண்டுவந்து இறுதியில் பேசும் வசனம் தியேட்டரில் பிளாஸ்ட் ஆகும். அவர் பேசி முடித்தபிறகு ஒட்டுமொத்த செட்டும் கைத்தட்ட ஆரம்பித்துவிட்டது, லோகேஷ் எல்லாம் பிரமித்துவிட்டார். அண்ணாமலை படத்துல அசோக்னு கூப்பிட்டு பேசுற வசனம் ஒரு நிமிடத்திற்குள் தான் வரும், ஆனால் இதில் 3 நிமிடம் வரை பேசக்கூடிய வசனத்தை தூள் கிளப்பிட்டார் ரஜினி சார். அந்த இடம் தியேட்டரில் உண்மையில் பிளாஸ்ட் ஆகும்” என்று பேசியுள்ளார்.