ராஜமௌலி இயக்கத்தில் மகேஷ்பாபு, பிரித்விராஜ், ப்ரியங்கா சோப்ரா நடிக்கும் படத்தின் அறிமுக விழா நவம்பர் 15ம் தேதி ஹைதராபாத் ராமோஜி ராவ் பிலிம் சிட்டியில் நடைபெற உள்ளது. இந்த நிகழ்வில் கலந்து கொள்ள கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. இது குறித்து ராஜமௌலி ஒரு வீடியோ வெளியிட்டுள்ளார்.
அதில் அவர் "நம்முடைய Globetrotter நிகழ்வுக்கு நீங்கள் அனைவரும் உற்சாகமாக காத்திருப்பது தெரியும். நானும் ஆர்வமாக காத்திருக்கிறேன். நமது நிகழ்வு நன்றாக நடக்க உங்கள் அனைவரது ஒத்துழைப்பு மிகவும் அவசியம். இந்நிகழ்வின் மீது பலருக்கும் உள்ள விபரீதமான ஆர்வத்தின் காரணமாக, நமது அனைவரும் பாதுகாப்பு கருதி காவல்துறை மிக கடுமையான நிபந்தனைகளை விதித்துள்ளனர்.
இது அனைவராலும் கலந்து கொள்ளக்க்கூடிய Open Event இல்லை. Physical Pass உள்ளவர்கள் மட்டுமே இந்த நிகழ்வில் கலந்து கொள்ள முடியும். சிலர் இதனை Open Event எனவும், வருபவர்கள் அனைவரும் கலந்து கொள்ளலாம் எனவும், ஆன்லைனில் நுழைவு சீட்டுகளை விற்கின்றனர் என சொல்லி சில வீடியோக்களில் பேசி இருந்ததை பார்த்தேன். அது உண்மை இல்லை.
15ம் தேதி ராமோஜி ராவ் பிலிம் சிட்டியின் முதன்மை வாயில் மூடப்படும். நுழைவுசீட்டு உள்ளவர்கள், அவர்கள் வரும் வழியை மையமாக வைத்து, அதற்கேற்ப வாயில்கள் ஒதுக்கப்பட்டுள்ளது. வலியோ காட்டுவதற்கான மேப் நுழைவு சீட்டில் உள்ள க்யூ ஆர் கோடை ஸ்கேன் செய்தால் வரும், பாதை எங்கும் வழிகாட்டும் பதாகைகளை உண்டு.
10 வயதிற்கு குறைவானவர்கள் மற்றும் முதியவர்களுக்கு இந்நிகழ்வில் கலந்து கொள்ள காவல்துறை அனுமதி கொடுக்கவில்லை. நீங்கள் வீட்டில் இருந்தே நேரலையில் நிகழ்ச்சியை பாருங்கள்." என்றார்.
இப்படத்தின் மீது மிகப்பெரிய எதிர்பார்ப்பு உருவாகியுள்ளது. படத்தின் அறிமுக வீடியோவை 100 அடி திரையில் பிரம்மாண்டமாக ஒளிபரப்ப உள்ளனர். படத்தின் பெயர் `வாரணாசி' எனவும் சொல்லப்படுகிறது.