OTT Release PT Web
ஓடிடி திரைப் பார்வை

Pushpa 2 | Identity | Tharunam | Bioscope - இந்த வார தியேட்டர், OTT ரிலீஸ் லிஸ்ட்!

Pushpa 2, Identity, Tharunam, Bioscope உட்பட பல திரைப்படங்கள் இந்த வாரம் ஓடிடி மற்றும் தியேட்டரில் வெளியாகின்றன. அந்த பட்டியலை இங்கே காணலாம்...

Johnson

Pushpa 2, Identity, Tharunam, Bioscope உட்பட பல திரைப்படங்கள் இந்த வாரம் ஓடிடி மற்றும் தியேட்டரில் வெளியாகின்றன. அந்த பட்டியலை இங்கே காணலாம்...

Series

Paradise (English) Hotstar - Jan 27

Paradise

Dan Fogelman உருவாகியுள்ள சீரிஸ் `Paradise'. பாதுகாப்பு வழங்கும் குழு ஒன்று சந்திக்கும் சவால்களே கதை.

Your Friendly Neighborhood Spider-Man (English) Hotstar - Jan 29

Your Friendly Neighborhood SpiderMan

Jeff Trammell உருவாக்கியுள்ள அனிமேஷன் சீரிஸ் `Your Friendly Neighborhood Spider-Man'. ஸ்பைடர்மேனகா மாறிய பீட்டர் பார்க்கரின் ஆரம்ப காலத்தை பற்றியதே கதை.

The Secret Of The Shiledars (Hindi) Hotstar - Jan 31

The Secret Of The Shiledars

ஆதித்யா இயக்கியுள்ள சீரிஸ் ` The Secret Of The Shiledars'. சத்ரபதி சிவாஜிக்கு சொந்தமான புதையல் ஒன்றை பற்றிய தகவல் கிடைக்க, அதை மீட்கும் பொறுப்பு ராஜீவுக்கு வழங்கப்பட, அதன் பின் என்ன என்பதே கதை.

OTT

Neela Mudi (Malayalam) manorama MAX - Jan 27

Neela Mudi

ஷரத் குமார் இயக்கியுள்ள படம் `Neela Mudi'. சாதிய அடக்குமுறைகள் பற்றி கூறும் படம்.

Pothugadda (Telugu) etv WIN - Jan 30

Pothugadda

ரக்ஷா வீரன் இயக்கியுள்ள படம் `Pothugadda'. ஒரு பேருந்து பயணம் ஆபத்தாக முடிய, அதன் பின் நடப்பவையே கதை.

You’re Cordially Invited (English) Prime - Jan 30

You’re Cordially Invited

Nicholas Stoller இயக்கியுள்ள படம் `You’re Cordially Invited'. ஒரு திருமண மண்டபத்தில் தவறுதலாக, இரு திருமணங்களுக்கு முன்பதிவாகிவிட, அந்த இரு திருமணங்கள் நடப்பதில் ஏற்படும் கல்யாண கலாட்டாக்களே கதை.

Coffee with a Killer (Telugu) Aha - Jan 31

Coffee with a Killer

பட் நாயக் இயக்கியுள்ள படம் `Coffee with a Killer'. காஃபி ஷாப் ஒன்றில் நடக்கும் கொலை, அதன் பின் நடப்பவை என்ன என்பதே கதை.

Saale Aashiq (Hindi) SonyLIV - Feb 1

Saale Aashiq

சித்தார்த் சிங் இயக்கியுள்ள படம் `Saale Aashiq'. ஒரு காதல் ஜோடி அரசியல் காரணங்களால் என்ன பாதிப்படைகிறார்கள் என்பதே கதை.

Post Theatrical Digital Streaming

Strange Darling (English) Jio Cinema - Jan 27

Strange Darling

JT Mollner இயக்கிய படம் `Strange Darling'. ஒன் நைட் ஸ்டான்ட் ரிலேஷன்ஷிப் ஆக துவங்குகிறது லேடி - டீமின் உறவு. ஆனால் ஊருக்குள் சைக்கோ கொலைகாரர் ஊருக்குள் உலவும் செய்தி வருகிறது. அதன் பின் நடக்கும் நிகழ்வுகளே கதை.

The Storyteller (Hindi) Hotstar - Jan 28

The Storyteller

ஆனந்த் மகாதேவன் இயக்கத்தில் பரேஷ் ராவல் நடித்துள்ள படம் `The Storyteller'. சத்யஜித் ரே எழுதிய `Golpo Boliye Tarini Khuro' என்ற சிறுகதையின் திரைப்பட வடிவமே இது.

Pushpa 2 – The Rule (Telugu) Netflix - Jan 30

Pushpa 2 The Rule

சுகுமார் இயக்கத்தில் அல்லு அர்ஜூன் நடித்த படம் `புஷ்பா 2’. 2021ல் வெளியான முதல் பாகத்தின் தொடர்சியாக, புஷ்பா - பன்வர் சிங் சிக்காவத் இடையே நடக்கும் மோதல்களும், புஷ்பாவின் வளர்ச்சியுமே கதை.

Bioscope (Tamil) Aha - Jan 31

Bioscope

சங்கரி ராஜ்குமார் இயக்கிய படம் `பயாஸ்கோப்'. கிராமத்தினர் சிலர் சேர்ந்து ஒரு திரைப்படம் எடுக்கும் முயற்சியால் என்ன விளைவுகள் ஏற்படுகிறது என்பதே கதை.

Identity (Malayalam) Zee5 - Jan 31

Identity

அகில் பால் - அனஸ் கான் இயக்கத்தில் த்ரிஷா, டொவினோ தாமஸ், வினய் ராய் நடித்த படம் `Identity'. ஒரு ஸ்கெட்ச் ஆர்ட்டிஸ்ட், காவல் துறை இணைந்து ஒரு குற்றவாளியை கண்டுபிடிக்க எடுக்கும் முயற்சிகளே கதை.

Queer (English) Mubi - Jan 31

Queer

Call Me by Your Name, Bones and All, Challengers படங்களுக்கு பிறகு Luca Guadagnino இயக்கியுள்ள படம் `Queer'. 50களில் மெக்சிகோவில் நிகழும் கதை. 40 வயதை தாண்டிய நபருக்கும், அந்த பகுதிக்கு புதிதாக வரும் மாணவருக்கும் இடையேயான உறவு பற்றி கூறும் கதை.

Theatre

Ponman (Malayalam) - Jan 30

Ponman

ஜோதிஷ் ஷங்கர் இயக்கத்தில் பேசில் ஜோசப் நடித்துள்ள படம் `Ponman '. ஜி ஆர் கோபன் எழுதிய Nalanchu Cheruppakar என்ற கதையை தழுவிய படமாக உருவாகியிருக்கிறது படம்.

Tharunam (Tamil) - Jan 31

Tharunam

அர்ஜுன் - மீரா இருவரும்  காதல் கொள்கிறார்கள். ஆனால் எதிர்பாராமல் வரும் ஒரு சிக்கல், அதன் பின் நடக்கும் திருப்பங்கள் கதை.

Ring Ring (Tamil) - Jan 31

Ring Ring

சக்திவேல் இயக்கியுள்ள  படம் `ரிங் ரிங்'. காமெடி த்ரில்லராக உருவாகியுள்ளது. 

Rajabheema (Tamil) - Jan 31

Rajabheema

நரேஷ் இயக்கத்தில் ஆரவ் நடித்துள்ள படம் `ராஜபீமா'. யானையை மையப்படுத்திய ஆக்ஷன் த்ரில்லராக உருவாகியுள்ளது.

Oru Jaathi Jathakam (Malayalam) - Jan 31

Oru Jaathi Jathakam

மோகனன் இயக்கத்தில் வினீத் ஸ்ரீனிவாசன் நடித்துள்ள படம் `Oru Jaathi Jathakam'. ஜெயேஷ் என்ற இளைஞனின் வாழ்க்கை நிகழ்வுகளே கதை.

Deva (Hindi) - Jan 31

Deva

ரோஷன் ஆண்ட்ரூஸ் இயக்கத்தில் ஷாஹித் கபூர் நடித்துள்ள படம் `Deva'. மலையாளத்தில் வெளியான Mumbai Police படத்தின் இந்தி ரீமேக் இது என சொல்லப்படுகிறது.

Companion (English) - Jan 31

Companion

Drew Hancock இயக்கியுள்ள படம் `Companion'. ஒரு பணக்காரரின் மரணம், ஐரிஷ் மற்றும் அவளது நண்பர்களை எப்படி பாதிக்கிறது என்பதே கதை.