OTT PT Web
ஓடிடி திரைப் பார்வை

Her | அந்தகன் | Parachute | Deepavali Bonus | சொர்க்கவாசல் | Moana 2 | இந்த வார ஓடிடி ரிலீஸ் லிஸ்ட்

Her, Andhagan, Parachute, Deepavali Bonus, சொர்க்கவாசல், Moana 2 என இந்த வாரம் தியேட்டர் மற்றும் ஓடிடி தளங்களில் வெளியாக உள்ள படங்கள், சீரிஸ் லிஸ்ட் இதோ...

Johnson

இந்த வாரம் தியேட்டர் மற்றும் ஓடிடி தளங்களில் வெளியாக உள்ள படங்கள், சீரிஸ் லிஸ்ட் இதோ...

Series

Vikkatakavi (Telugu) Zee5 - Nov 28

Vikkatakavi

பிரதீப் இயக்கியுள்ள சீரிஸ் `Vikkatakavi’. 1970ம் ஆண்டு அமரகிரியின் ஊர் மக்களுக்கு ஞாபகங்கள் பறிபோகிறது. இதன் பின் இருக்கும் மர்மத்தை கண்டுபிடிக்க களம் இறங்குகிறார் டிடெக்டிவ் ராமகிருஷ்ணா? கண்டுபிடித்தாரா இல்லையா என்பதே கதை.

The Madness (English) Netflix - Nov 28

The Madness

Colman Domingo நடித்துள்ள சீரிஸ் `The Madness’. டேனியல்ஸ் தன் மீது விழுந்த பழியை துடைக்கப் போராடுவதே கதை.

Parachute (Tamil) Hotstar - Nov 29

Parachute

கிருஷ்ணா, கிஷோர், கனி நடித்துள்ள சீரிஸ் `Parachute'. அப்பாவின் கண்டிப்பிலிருந்து தப்பிக்க நினைக்கும் குழந்தைகள் செல்லும் ஒரு பயணம் ஆபத்தில் முடிகிறது. அதன் பின் என்ன என்பதே கதை.

OTT

Secret (Malayalam) manorama MAX - Nov 24

Secret

எஸ். என். ஸ்வாமி இயக்கத்தில் தியான் ஸ்ரீனிவாசன் நடித்த படம் `Secret’. தான் திருமணம் செய்து கொள்ளப் போகும் பெண் பற்றிய ஒரு ரகசியத்தை தெரிந்து கொள்ளும் ஹீரோ, அதன் பின் என்ன செய்கிறான் என்பதே கதை.

Sshhh (Tamil) Aha - Nov 29

Shhh

இந்தியில் வெளியான Lust Stories ஆந்தாலஜியின் தமிழ் ரீமேக் தான் `ஷ்’ 

Her (Malayalam) manorama MAX - Nov 29

லிஜின் ஜோஸ் இயக்கத்தில் ஊர்வசி, பார்வதி, லிஜோ மோல், ரம்யா நம்பீசன், ஐஸ்வர்யா ராஜேஷ் எனப் பலரும் நடித்துள்ள படம் `Her’. பெண்களின் வாழ்க்கையில் நடக்கும் பல விஷயங்களைப் பற்றி பேசும் படம்.

Sikandar Ka Muqaddar (Hindi) Netflix - Nov 29

Sikandar Ka Muqaddar

நீரஜ் பாண்டே இயக்கத்தில் தமன்னா, அவினாஷ் திவாரி, ஜிம்மி ஷெர்கில் நடித்துள்ள படம் `Sikandar Ka Muqaddar'. வைரக் கொள்ளையை விசாரிக்கும் ஒரு காவலதிகாரி செய்யும் செயல்களே கதை.

Post Theatrical Digital Streaming

Deepavali Bonus (Tamil) Aha - Nov 25

Deepavali Bonus

ஜெயபால் இயக்கத்தில் விக்ராந்த், ரித்விகா நடித்த படம் `தீபாவளி போனஸ்’. தீபாவளிக்கு தன் மகனுக்கு பரிசளிக்க நினைக்கும் பெற்றோரின் சிக்கல்களே கதை.

Andhagan (Tamil) Prime - Nov 26

Andhagan

தியாகராஜன் இயக்கத்தில் பிரசாந்த் நடித்த படம் `அந்தகன்’. இந்தியில் வெளியான அந்தாதுன் படத்தின் தமிழ் ரீமேக். ஒரு இசைக்கலைஞர் பெரிய பிரச்சனையில் சிக்கிக் கொள்ள அதன் பின் என்ன ஆகிறது என்பதே கதை.

Appudo Ippudo Eppudo (Telugu) Prime - 27

Appudo Ippudo Eppudo

சுதீர்வர்மா இயக்கத்தில் நிகில் நடித்த படம் `Appudo Ippudo Eppudo’. ரிஷி என்ற இளைஞனின் பயணமே படத்தின் கதை.

KA (Telugu) WinTV - Nov 28

KA

சுஜீத் - சந்தீப் இயக்கத்தில் கிரண் அப்பாவரம் நடித்த `KA'. கிராமத்தில் தொடர்ந்து பல பெண்கள் காணாமல் போக, அதன் பின் இருக்கும் மர்மத்தை கண்டறிய முற்படும் ஒரு போஸ்ட்மேனின் கதை.

Krishnam Pranaya Sakhi (Kannada) Sun NXT - Nov 29

Krishnam Pranaya Sakhi

ஸ்ரீனிவாசராஜூ இயக்கத்தில் கணேஷ், மாளவிகா நடித்த படம் `Krishnam Pranaya Sakhi’. ஏழையான பெண்ணைக் காதலிக்கும் பணக்கார ஹீரோ, தன் அடையாளத்தை மறைத்துக் கொண்டு, ஹீரோயினிடம் வேலைக்கு சேர்கிறார். அதன் பின் நடப்பவையே கதை.

Boy Kills World (English) Lionsgate Play - Nov 29

Boy Kills World

Moritz Mohr இயக்கிய படம் `Boy Kills World'. தன் குடும்பத்தை கொலை செய்தவனைப் பழிவாங்க தயாராகும் ஹீரோவின் கதை.

Theatre

Sorgavaasal (Tamil) - Nov 29

Sorgavaasal

சித்தார்த் விஷ்வநாத் இயக்கத்தில் ஆர் ஜே பாலாஜி, செல்வராகவன் நடித்துள்ள படம் `சொர்க்கவாசல்’. சிறைச்சாலையில் நடக்கும் ஒரு சம்பவமே கதை.

Miss You (Tamil) - Nov 29

Miss You

ராஜசேகர் இயக்கத்தில் சித்தார்த் - ஆஷிகா நடித்துள்ள படம் `மிஸ் யூ’. காதலில் வரும் பிரச்சனையே கதை.

Moana 2 (English) - Nov 29

Moana 2

David Derrick Jr, Jason Hand மற்றும் Dana Ledoux Miller இயக்கியுள்ள படம் `Moana 2’. 2016ல் வெளியான Moana  போனா படக்கதையின் நிகழ்வுகளுக்கு மூன்றாண்டுகள் கழித்து நடப்பவையே கதை.