சத்தமே இல்லாமல் சூர்யா செய்த செயல்.. கோவிலில் படமாக்கப்பட்ட முதல் காட்சி!
சிறுத்தை சிவா இயக்கத்தில் சூர்யா நடிப்பில் வெளியான கங்குவா திரைப்படம் கலவையான விமர்சனங்களை பெற்று வருகிறது. பெரிய அளவிலான பட்ஜெட்டில் உருவான இந்த படம், நிச்சயம் அனைவரும் ரசிக்கும்படியாக இருக்கும் என்று படக்குழு நம்பிக்கை தெரிவித்து வந்த நிலையில், அதற்கு நேர் மாறாக விமர்சனங்கள் எழுந்து வருகிறது.
இது ஒரு பக்கம் இருக்க, தனது அடுத்த படத்தின் வேலைகளில் இறங்கியுள்ளார் நடிகர் சூர்யா.
அடுத்த படத்துக்கான வேலையில் இறங்கிய சூர்யா..
சூர்யாவின் அடுத்த படத்தை ஆர்.ஜே பாலாஜி இயக்குகிறார் என்று தகவல் வெளியாகி வந்த நிலையில், அந்த படத்தின் பூஜை இன்று நடைபெற்றது. பொள்ளாச்சியை அடுத்த ஆனைமலையில் உள்ள மாசாணி அம்மன் கோவிலில் இப்படத்திற்கான தொடக்க பூஜை நடைபெற்றது. இதில் ஆனைமலை மாசாணி அம்மன் கோயில் அறங்காவலர் குழு தலைவர் முரளி கிருஷ்ணன் மற்றும் அறங்காவலர் குழு உறுப்பினர்கள் பலர் கலந்து கொண்டனர்.
படத்தின் முதல் காட்சி கோவிலில் படமாக்கப்பட்ட நிலையில், பூஜையில் பங்கேற்ற சூர்யாவைக் காண ரசிகர்கள் பலரும் அப்பகுதியில் குவிந்ததனர். அவருடன் செல்ஃபி எடுத்தும் மகிழ்ந்தனர்.
பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட கங்குவா படம் கடும் விமர்சனங்களை சந்தித்து வந்தாலும், சத்தமே இல்லாமல் ஆர்.ஜே பாலாஜியின் இயக்கத்தில் அடுத்த படத்தின் ஷூட்டிங்கில் இறங்கியுள்ளார் சூர்யா.