Master JD web
சினிமா

”மாஸ்டர்-2, லியோ-2 குறித்து விஜயிடம் பேசினேன்! JD-க்காக ஜாலியா ஒரு கதை இருக்கு” - லோகேஷ் கனகராஜ்

மாஸ்டர் திரைப்படத்தில் JD கேரக்டர் ரசிகர்கள் எல்லோருக்கும் ரொம்ப புடிச்சிருந்தது, அந்த கதாபாத்திரத்தை சுற்றி ஜாலியா ஒரு கதையை விஜய் அண்ணாவிடம் கூறியதாக லோகேஷ் வெளிப்படுத்தியுள்ளார்.

Rishan Vengai

நடிகர் விஜயை வைத்து மாஸ்டர், லியோ என்ற இரண்டு திரைப்படங்களை இயக்கியவர் லோகேஷ் கனகராஜ். இரண்டு திரைப்படத்திலும் விஜயின் கேரக்டர்கள் ரசிகர்களுக்கு மிகவும் பிடித்திருந்தது. அதிலும் மாஸ்டர் திரைப்படத்தின் JD கதாபாத்திரத்திற்கு என்றே தனி ரசிகர்கள் இருக்கின்றனர்.

விஜய் - லோகேஷ்

அதுவரை விஜய் நடித்திருந்த அனைத்து பட கதாபாத்திரங்களில் இருந்தும் JD கேரக்டர் மாறுபட்டிருந்தது. ஜாலியான, எதைப்பற்றியும் பெரிதும் கவலைப்படாத, அதேநேரத்தில் பொறுப்பை உணர்ந்த ஒரு கதாபாத்திரமாக JD கேரக்டர் மாஸ்டரில் உருவாக்கப்பட்டிருக்கும். மூன்று வெவ்வேறு நிலையிலான காட்சியமைப்பிலும் JD-ஆக விஜய் அற்புதமாக நடித்திருப்பார்.

Master JD

இந்த சூழலில் ரசிகர்களுக்கு மிகவும் பிடித்துப்போன JD-க்காகாவே மாஸ்டர் 2 திரைப்படம் குறித்து விஜயிடம் பேசியதாக லோகேஷ் கூறியுள்ளார்.

JD-க்காக ஜாலியா ஒரு கதை..

லியோ திரைப்படத்தை முடித்தபிறகு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தை வைத்து கூலி என்ற திரைப்படத்தை இயக்கியுள்ளார் லோகேஷ் கனகராஜ். இப்படத்தில் அசத்யராஜ், நாகார்ஜூனா, உபேந்திரா, சவுபின் சாஹிர், ஸ்ருதி ஹாசன் உள்ளிட்ட பல ஸ்டார் நடிகர்கள் நடித்துள்ளனர். அனிருத் இசையமைத்துள்ளார்.

மிகப்பெரிய எதிர்ப்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கும் இப்படம் ஆகஸ்டு 14-ம் தேதி வெளியாகவிருக்கும் நிலையில், இயக்குநர் லோகேஷ் கனகராஜ் புரொமோஷன் வேலைகளில் இறங்கியுள்ளார்.

Master JD

படம் சார்ந்து நிறைய நேர்காணல்களில் பங்கேற்றுவரும் லோகேஷ், நடிகர் விஜய் உடன் மாஸ்டர்-2, லியோ-2 படத்திற்கான ஐடியாவை விவரித்ததாக கூறியுள்ளார். இதுகுறித்து வெளியாகியிருக்கும் தகவலில், “மாஸ்டர் பாகம் 2-க்கான ஐடியாவை விஜய் அண்ணாவிடம் சொன்னேன். அது ரொம்ப ஜாலியா இருக்கும், ரசிகர்களுக்கு JD கேரக்டர் ரொம்பப் பிடிச்சிருக்கு. LEO 2-க்கான ஐடியாவையும் சொன்னேன்.

ஆனால் இப்போ அவருடைய எண்ணம் வேற மாதிரி இருக்கு, அது இப்போதைக்கு ரொம்ப முக்கியமான தேவை. ஆனால் தனிப்பட்ட முறையில் எனக்கு இரண்டு படங்களுமே பண்ணணும்னு ஆசை” என கூறியிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.