Mysskin, Keerthy Suresh pt web
சினிமா

கீர்த்தி சுரேஷ், மிஷ்கின் நடிப்பில் புதிய படம்! | Keerthy Suresh | Mysskin

கீர்த்தி சுரேஷ் மிஷ்கின் இணைந்து நடிக்கும் புதிய திரைப்படத்திற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டிருக்கிறது.

Johnson

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகை கீர்த்தி சுரேஷ். இவர் நடிப்பில் கடந்த ஆண்டு தமிழில் `சைரன்', `ரகு தாத்தா', இந்தியில் `பேபி ஜான்' ஆகிய படங்கள் வெளியானது. இந்த ஆண்டு தெலுங்கில் `உப்பு கப்புரம்பு' படம் வெளியானது. மேலும் `ரிவால்வர் ரீட்டா', `கண்ணிவெடி' போன்ற படங்கள் ரிலீசுக்கு தயாராகி வருகின்றன. இந்த நிலையில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் தனது காதலர் ஆண்டனியை திருமணம் செய்து கொண்டார். சினிமாவிலும் சின்ன பிரேக் எடுத்துக் கொண்டார் கீர்த்தி.

Keerthy Suresh, Praveen S Vijaay, Mysskin

தற்போது இவர் நடிக்கும் அடுத்த படம் அறிவிக்கப்பட்டுள்ளது. கோர்ட் ரூம் ட்ராமாகவாக உருவாகும் இப்படத்தில் கீர்த்தியுடன் இணைந்து மிஷ்கினும் முக்கியமான பாத்திரத்தில் நடிக்கிறார். இவர்களுடன் ஹார்ட்பீட் சாருகேஷ், பாலசரவணன், பாலாஜி சக்திவேல், R சுந்தர்ராஜன், மாலா பார்வதி, தீபா, A.வெங்கடேஷ், ஸ்டில்ஸ் பாண்டியன் ஆகியோர் முக்கிய கதாப்பாத்திரங்களில் இணைந்து நடிக்கின்றனர். அருள் வின்சென்ட் ஒளிப்பதிவு செய்யும் இப்படத்திற்கு சாம் சி எஸ் இசையமைக்கிறார். அறிமுக இயக்குநர் பிரவீன் S விஜய் இப்படத்தினை இயக்குகிறார்.

Zee studios & Drumsticks Productions  சார்பில், வெடிக்காரன்பட்டி S சக்திவேல் மற்றும்  உமேஷ் குமார் பன்சால் தயாரிப்பில், உருவாகும் இப்படத்தின் பூஜையில் படக்குழுவினர் கலந்துகொள்ள, வெகு விமரிசையாக நடைபெற்றது. இப்படத்தின் படப்பிடிப்பு சென்னை மற்றும் கோயம்புத்தூரில் ஒரே கட்டமாக நடத்தி முடிக்கத் திட்டமிடப்பட்டுள்ளது. இப்படத்தின் மற்ற தகவல்கள் விரைவில் அதிகாரப்பூர்வமாக வெளியாகும் என சொல்லப்படுகிறது.