SSMB29 Rajamouli, Mahesh Babu
சினிமா

இரு பாகங்களாக உருவாகிறதா ராஜமௌலி - மகேஷ்பாபு படம்? | SSMB29 | Globe Trotter

கென்ய நாட்டு பத்திரிக்கை ஒன்று, SSMB 29 இரு பாகங்களாக உருவாகிறது என எழுதியிருக்கிறது. இதற்கு முன் ராஜமௌலி பாகுபலியை இரு பாகங்களாக எடுத்து வெற்றி பெற்றார். எனவே அதேபோல் இப்படமும் உருவாகிறதா என பல பேச்சுக்கள் எழுந்தது.

Johnson

RRR படத்தின் வெற்றிக்குப் பிறகு ராஜமௌலி இயக்கத்தில் உருவாகிவரும் படம் SSMB 29. முதன்முறையாக ராஜமௌலி - மகேஷ்பாபு கூட்டணி இப்படத்தில் இணைந்திருப்பதால் படத்தின் மீது மிகப்பெரிய எதிர்பார்ப்பு உருவாகியிருக்கிறது. இப்படத்தில் மகேஷ்பாபுவுடன், ப்ரியங்கா சோப்ரா, ப்ரித்விராஜ் ஆகியோர் முக்கிய பாத்திரங்களில் நடிக்கின்றனர்.

Globe Trotter

ஆகஸ்ட் 9 நடிகர் மகேஷ்பாபு பிறந்தநாளன்று, இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், படத்திற்கு Globe Trotter என்ற டேக் கொடுத்து ஒரு புகைப்படத்தை வெளியிட்டார்கள். மேலும் நவம்பரில் யாரும் எதிர்பாராத விதத்தில் இப்படத்தை அறிமுகப்படுத்துவோம் என அறிவிப்பை வெளியிட்டார் ராஜமௌலி.

மிகப்பிரம்மாண்டமாக உருவாகும் இப்படத்தின் படப்பிடிப்புக்காக டான்சானியா சென்றுள்ளது படக்குழு. படத்துக்கு ஏற்ற லொகேஷன்களை தேடும் பணி தற்போது நடைபெற்று வருகிறது. படத்தில் ஆப்பிரிக்கா சார்ந்த காட்சிகளில் 95 சதவீதம் கென்யாவில் படம்பிடிக்கப்பட உள்ளது.

இதனிடையே கென்யாவின் முக்கிய அதிகாரிகளை மரியாதை நிமித்தமாக சென்று சந்தித்து வந்திருக்கிறார் ராஜமௌலி. இந்த சந்திப்பு முடிந்ததும் கென்யாவின் Prime Cabinet Secretary Musalia Mudavadi "கென்யாவுக்கு இது சினிமாவை தாண்டிய ஒரு முடிவு. இந்நாட்டின் இயற்கை அழகையும், கலாச்சாரத்தையும், விருந்தினரை மதிக்கும் பண்பையும் உலக மக்களுக்கு காட்டப் போகும் சரித்திர நிகழ்வு இது" எனத் தன் எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டிருக்கிறார்.

இந்த சந்திப்பை குறிப்பிட்டு கென்ய நாட்டு பத்திரிக்கை ஒன்று, SSMB 29 இரு பாகங்களாக உருவாகிறது என எழுதியிருக்கிறது. உடனே அதனை பலரும் சமூக வலைத்தளங்களில் பகிர்ந்தனர். இதற்கு முன் ராஜமௌலி பாகுபலியை இரு பாகங்களாக எடுத்து வெற்றி பெற்றார். எனவே அதே போல் இப்படமும் உருவாகிறதா என பல பேச்சுக்கள் எழுந்தன. ஆனால், இன்னொரு பக்கம், இது ஒரே பாகமாக உருவாகும் படம்தான் என அழுத்தமாக சொல்கிறது தெலுங்கு மீடியாக்கள். ராஜமௌலிக்கு நெருக்கமான வட்டாரங்களும் இப்படம் ஒரே பாகமாக RRR படம் மாதிரி 3.30 மணிநேர படமாக தான் உருவாகிறது என்று முன்பே பலமுறை பதிவு செய்திருக்கிறார்கள். இருந்தாலும் இது ஒரேபாகமா, இரு பாகமா என்பதை அதிகாரப்பூர்வமாக ராஜமௌலியே நவம்பரில் அறிவிப்பார், அதுவரை காத்திருப்போம்.