Rashmika Mandanna The Girlfriend
சினிமா

"விஜய் தேவரகொண்டாவை திருமணம் செய்து கொள்வேன்" - வைரலான ராஷ்மிகாவின் பதில் | Rashmika

கடந்த வருடம் இருவருமே தங்கள் துணையின் பெயரை குறிப்பிடாமல், ரிலேஷன்ஷிப்பில் இருப்பதாக மறைமுகமாக தங்கள் காதலை வெளிப்படுத்தி வந்தனர்.

Johnson

தெலுங்கு சினிமாவின் முன்னணி நடிகர் விஜய் தேவரகொண்டா. கன்னட சினிமாவில் அறிமுகமாகி தெலுங்கு, தமிழில் பிசியாக நடித்துக் கொண்டிருப்பவர் ராஷ்மிகா மந்தனா. இந்த ஜோடிக்கு அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதம் திருமணம் ஆக இருப்பதாக சொல்லப்படுகிறது. ஆனாலும் இதனை பற்றி எங்கும் இந்த ஜோடி தெரிவிக்கவில்லை. தற்போது பேட்டி ஒன்றில் திருமணம் குறித்து ராஷ்மிகா கூறிய விஷயம் வைரலாகி இருக்கிறது.

Rashmika Mandanna, Vijay Devarakonda

விஜய் தேவரகொண்டா – ராஷ்மிகா மந்தனா இருவரும் `கீதா கோவிந்தம்', `டியர் காம்ரேட்' ஆகிய படங்களில் இணைந்து நடித்தனர். சில வருடங்களாகவே அவர்கள் இருவரும் காதலிப்பதாக தகவல்கள் பரவி வந்தன. ஆனால் பொதுவெளியில் இருவரும் அதபற்றி எந்த உறுதியான தகவலையும் பகிரவில்லை. கடந்த வருடம் இருவருமே தங்கள் துணையின் பெயரை குறிப்பிடாமல், ரிலேஷன்ஷிப்பில் இருப்பதாக மறைமுகமாக தங்கள் காதலை வெளிப்படுத்தி வந்தனர். இந்த நிலையில் கடந்த மாதம் இந்த ஜோடிக்கு நிச்சயதார்த்தம் நடைபெற்றது. அது குறித்த புகைப்படங்களை இருவருமே வெளியிடவில்லை. ஆனாலும் நிச்சயதார்த்த மோதிரத்துடனேயே ராஷ்மிகா பல இடங்களில் தோன்றி இருக்கிறார்.

இந்த நிலையில் ராஷ்மிகா நடித்துள்ள `தி கேர்ள்ஃப்ரெண்ட்' படம் இந்த வாரம் வெளியானது. இந்தப் படத்தின் புரமோஷன் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட ராஷ்மிகா தன் துணைவர் எப்படி இருக்க வேண்டும் என தெரிவித்திருந்தார். "என்னை மிக ஆழமாக புரிந்து கொள்பவராக இருக்க வேண்டும். இதை நான் மேலோட்டமாக சொல்லவில்லை. அது அவரது சொந்தக் கண்ணோட்டத்தில் வாழ்க்கையைப் புரிந்துகொள்வது. சில சூழ்நிலைகளை அவர் எப்படி உணர்கிறார்? பிறரை புரிந்து கொள்ள எப்போதும் வெளிப்படையாக இருக்கும் ஒருவரே எனக்கு தேவை. உண்மையிலேயே நல்லவராகவும், என்னுடன் சேர்ந்து போராடுபவராகவும், எனக்காக போராடுபவராகவும் இருக்க வேண்டும். நாளை என் மீது போர் தொடுத்தால், எனக்காக அவர் சண்டையிடுவார் என நான் அறிந்திருக்க வேண்டும். நானும் அதையே செய்வேன். எந்த நாளிலும் அவனுக்காக தோட்டாவை வாங்குவேன். அப்படியானவர் தான் எனக்கானவர்." எனப் பேசினார்.

அதன் பின், நீங்கள் யாருடன் டேட் செய்வீர்கள், யாரை திருமணம் செய்வீர்கள் எனக் கேட்கப்பட "நான் நருட்டோவை (அனிமேஷன் கதாபாத்திரம்) டேட் செய்வேன். எனக்கு மிகவும் பிடித்த பாத்திரம் அது. விஜய் தேவரகொண்டாவை திருமணம் செய்து கொள்வேன்" என பதில் அளித்திருக்கிறார். இந்த பதில் இப்போது வைரலாகி இருக்கிறது. இப்போதைக்கு இவர்களின் திருமணம் பற்றிய அப்டேட் என்னவென்றால், திருமணத்துக்கான இடத்தை ஜெய்பூரில் தேடிக் கொண்டிருப்பதாக சொல்லப்படுகிறது. அடுத்த ஆண்டு பிப்ரவரியில் திருமணத்தை நடத்த தீவிரமாக வேலைகள் நடந்து கொண்டிருக்கிறதாம்.