Mammootty
MammoottyBramayugam

Academy Museumல் திரையிடப்படும் மம்மூட்டியின் `பிரமயுகம்' | Mammootty | Bramayugam

Academy Museum சார்பாக லாஸ் ஏஞ்சல்ஸில் ஜனவரி 10 - பிப்ரவரி 12 வரையில் பல படங்கள் திரையிடப்பட உள்ளது.
Published on

மம்மூட்டி நடிப்பில் ராகுல் சதாசிவன் இயக்கி 2024ல் வெளியான மலையாளப்படம் `பிரமயுகம்'. இந்தப் படம் பரவலான பாராட்டுகளை குவித்தது. அது மட்டுமல்லாது சமீபத்தில் அறிவிக்கப்பட்ட 55வது கேரள மாநில திரைப்பட விருதுகளில் சிறந்த நடிகர், சிறந்த குணச்சித்திர நடிகர், சிறந்த பின்னணி இசை, சிறந்த ஒப்பனை என நான்கு விருதுகளை வென்றது. இப்படம் மூலம் மம்மூட்டி 7வது கேரள மாநில திரைப்பட விருதை பெற்றார். தற்போது இந்தப் படத்திற்கு இன்னொரு பெருமையும் சேர்ந்துள்ளது.

Academy Museum சார்பாக லாஸ் ஏஞ்சல்ஸில் ஜனவரி 10 - பிப்ரவரி 12 வரையில் பல படங்கள் திரையிடப்பட உள்ளது. இந்த திரையிடலில் `Where the Forest Meets the Sea: Folklore from Around the World' என்ற திரைப்பட தொடரின் ஒரு பகுதியாக `பிரமயுகம்' பிப்ரவரி 12ம் தேதி திரையாக உள்ளது. இந்த திரைவிழாவில் கலந்து கொள்ளும் ஒரே இந்திய படம் `பிரமயுகம்' தான் என்பது குறிப்பிடத்தக்கது. இதனை தனது எக்ஸ் தளத்தில் பகிர்ந்துள்ள நடிகர் மம்மூட்டி "அகாடமி மியூசியத்தின் Where the Forest Meets the Sea திரைப்படத் தொடரில் திரையிடப்படும் ஒரே இந்தியப் படமாக `பிரமயுகம்' என்பதை பகிர்ந்து கொள்வதில் மகிழ்ச்சி அடைகிறேன். பிரமயுகத்தின் பின்னணியில் உள்ள முழு குழுவினருக்கும் பெருமை சேர்க்கும் மற்றொரு தருணம்" எனக் குறிப்பிட்டுள்ளார்.

இதை பற்றி ஒரு பேட்டியில் பேசிய இயக்குநர் ராகுல் சதாசிவன் "அகாடமி எங்களுக்குத் தகவல் தெரிவித்தபோது நாங்கள் முதலில் அதிர்ச்சியடைந்தோம். எங்கள் படம் அகாடமி அருங்காட்சியகத்தில் திரையிடப்படுவது குறித்து மிகவும் மகிழ்ச்சியடைகிறேன். இப்படி அங்கீகரிக்கப்படுவது ஒரு மரியாதை" எனக் கூறியுள்ளார். இதற்கிடையில், ராகுல் சதாசிவன் மோகன்லாலின் மகன் பிரணவ் மோகன்லால் நடிப்பில் இயக்கி சமீபத்தில் வெளியான `டீயஸ் ஈரே' படமும் பாராட்டுகளைப் பெற்று ஹாட்ரிக் வெற்றியை அனுபவித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com