ஜெயம் ரவி - ஆர்த்தி web
சினிமா

நடிகர் ஜெயம் ரவி - ஆர்த்தி விவாகரத்து வழக்கு: நீதிமன்றம் புதிய உத்தரவு!

விவாகரத்து வழக்கில் நடிகர் ஜெயம் ரவி மற்றும் அவரின் மனைவி ஆர்த்தி சமரச தீர்வு மையத்தில் நேரில் ஆஜராகி பேச்சு வார்த்தை நடத்தினர்.

PT WEB

செய்தியாளர்: V M சுப்பையா

நடிகர் ஜெயம் ரவி - ஆர்த்தி தம்பதி கடந்த 2009ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டனர். இந்நிலையில் 15 ஆண்டு கால திருமண உறவில் இருவருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்ட காரணத்தால், இருவரும் தற்போது தனித்தனியாக பிரிந்து வாழ்ந்து வருகின்றனர்.

ஜெயம் ரவி, ஆர்த்தி

மனைவியிடம் இருந்து விவாகரத்து கேட்டு ஜெயம் ரவி சென்னை குடும்ப நல நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில், தனது மனைவியிடம் இருந்து விவாகரத்து வழங்க வேண்டும் எனவும், 2009-ம் ஆண்டு பதிவு செய்த எங்கள் திருமண பதிவை ரத்து செய்ய வேண்டுமெனவும் கோரியுள்ளார்.

நீதிமன்றம் புதிய உத்தரவு..

இந்த வழக்கு சென்னை மூன்றாவது குடும்ப நல நீதிமன்ற நீதிபதி தேன்மொழி முன் இன்று விசாரணைக்கு வந்தபோது, சமரச தீர்வு மையத்தில் பேச்சு வார்த்தை நடத்த உத்தரவிட்டிருந்தார்.

jayam ravi

இதையடுத்து இந்த வழக்கு சமரச தீர்வு மையத்தில் விசாரணைக்கு வந்தபோது, ஜெயம்ரவி மற்றும் ஆர்த்தி நேரில் ஆஜராகி இருந்தனர். பின்னர் இருவரிடமும் சுமார் 1 மணி நேரத்திற்கும் மேலாக மத்தியஸ்தர் பேச்சுவார்த்தை நடத்தினார். இதையடுத்து, விசாரணையை டிசம்பர் 7ம் தேதிக்கு நீதிபதி தள்ளிவைத்தார்.