ஆதித்யா தர் இயக்கிய ‘துரந்தர் தி ரிவென்ஞ்’ படம், தியேட்டரில் 3 மணி 49 நிமிடமாக ஓடியது. ஓடிடி பதிப்பில் Dhurandhar The Revenge Raw And Undekha என்ற பெயரில் 3 மணி 52 நிமிடமாக, கூடுதல் 3 நிமிட புதிய காட்சிகளுடன் வெளியாகிறது. ரசிகர்கள் பார்க்காத இந்த காட்சிகள் காரணமாக ஓடிடி வெளியீட்டை எதிர்பார்ப்பு சூழ்ந்துள்ளது.
ரன்வீர் சிங், அக்ஷய் கண்ணா, சஞ்சய் தத், அர்ஜூன் ராம்பால், மாதவன், சாரா அர்ஜூன் நடிப்பில் ஆதித்யா தர் இயக்கி கடந்த ஆண்டு இறுதியில் வெளியாகி 1300 கோடிக்கு மேல் வசூல் செய்து சாதனை படைத்தது `துரந்தர்'. இப்படத்தின் இரண்டாம் பாகமான `துரந்தர் தி ரிவென்ஞ்' மார்ச் 19 வெளியானது. முதல் பாகத்தைவிட மிகப்பெரிய வெற்றி பெற்று 1800 கோடிக்கு மேல் வசூலித்தது.
இப்படம் வெளியாகி கிட்டத்தட்ட 2 மாதங்கள் ஆனாலும், படத்தின் ஓடிடி வெளியீடு பற்றி எந்த தகவலும் இல்லாமல் இருந்தது. இந்நிலையில் இப்படம் இந்தியா அல்லாத பிற நாடுகளில் மே 14 மற்றும் 15 ஆகிய தேதிகளில் வெளியாகும் என நேற்று அறிவிக்கப்பட்டது. இன்று இந்தியாவில் `துரந்தர் தி ரிவென்ஞ்' எப்போது வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஜூன் 4ம் தேதி மாலை 7 மணிக்கு ஜியோ ஹாட்ஸ்டாரில் இப்படம் லைவ் ஸ்ட்ரீமில் ஒளிபரப்பாக உள்ளது. அதனை தொடர்ந்து ஜூன் 5ம் தேதி ஓடிடி தளத்திலும் வெளியாக இருக்கிறது என அறிவித்துள்ளனர்.
தியேட்டரில் நாம் பார்த்த `துரந்தர் தி ரிவென்ஞ்' படத்தின் நீளம் 3 மணிநேரம் 49 நிமிடங்கள், இப்போது ஓடிடியில் வெளியாகவுள்ள இப்படத்தின் நீளம் 3 மணிநேரம் 52 நிமிடங்கள். இதனை Dhurandhar The Revenge Raw And Undekha என்ற பெயரில் வெளியிடுகின்றனர். தியேட்டரில் நாம் பார்க்காத 3 நிமிட கூடுதல் காட்சிகள் இதில் இடம்பெற உள்ளது.