smriti irani, bill gates எக்ஸ் தளம்
சினிமா

ஸ்மிருதி இரானி நடிக்கும் சீரியலில் பில் கேட்ஸ் நடிக்கிறாரா?

முன்னாள் மத்திய அமைச்சரான ஸ்மிருதி இரானி அமெரிக்க கோடீஸ்வரர் பில் கேட்ஸ் பங்கேற்கிறார் என தொடரை தயாரிக்கும் ஏக்தா கபூரின் பாலாஜி டெலிபிலிம்ஸ் நிறுவனத்தைச் சேர்ந்தவர்கள் தெரிவித்துள்ளனர்

கணபதி சுப்ரமணியம்

முன்னாள் மத்திய அமைச்சரான ஸ்மிருதி இரானி அமெரிக்க கோடீஸ்வரர் பில் கேட்ஸ் பங்கேற்கிறார் என தொடரை தயாரிக்கும் ஏக்தா கபூரின் பாலாஜி டெலிபிலிம்ஸ் நிறுவனத்தைச் சேர்ந்தவர்கள் தெரிவித்துள்ளனர்

மைக்ரோசாப்ட் நிறுவனரும் அமெரிக்காவின் மிகப்பெரிய கோடீஸ்வரர்களில் ஒருவருமான பில் கேட்ஸ் விரைவில் ஸ்மிருதி இரானி நடிக்கும் பிரபல தொலைக்காட்சி தொடரில் பங்கேற்கிறார். முன்னாள் மத்திய அமைச்சரான ஸ்மிருதி இரானி, மாமியாரும் முன்பு மருமகளாக இருந்தவளே என பொருள்படும் தலைப்பு கொண்ட ’கியூன் கி சாஸ் பி கபி பஹு தி’ சீரியலில் நடிக்கிறார். இந்த தொடரின் 3 அத்தியாயங்களில் அமெரிக்க கோடீஸ்வரர் பில் கேட்ஸ் பங்கேற்கிறார் என தொடரை தயாரிக்கும் ஏக்தா கபூரின் பாலாஜி டெலிபிலிம்ஸ் நிறுவனத்தைச் சேர்ந்தவர்கள் தெரிவித்துள்ளனர்.

ஸ்மிருதி இரானி

தனது தொண்டு நிறுவனம் மூலம் பல்வேறு சமூகச் சேவைகளை செய்துவரும் பில் கேட்ஸ் இந்த தொடரின் மூலம் கருத்தரித்துள்ள பெண்கள் மற்றும் குழந்தைகள் ஆரோக்கியத்தைப் பேணுவது அவசியம் என வலியுறுத்த உள்ளார். தொடரில் ’துளசி விராணி’ என்கிற பாத்திரமாக நடிக்கும் ஸ்மிருதி இரானி காணொளி மூலம் பில் கேட்ஸுடன் பேசுவதுபோல காட்சிகள் அமைந்திருக்கும் என அவர்கள் தெரிவித்தனர்.

பில் கேட்ஸ் உலகின் மிகப்பெரிய பணக்காரர்கள் வரிசையில் 12வது இடத்தில் உள்ளவர். ஒருகட்டத்தில், இவரது சொத்தின் மதிப்பு 124 பில்லியன் என கணக்கிடப்பட்ட நிலையில், தற்போது மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தின் நிர்வாகத்தில் இருந்து ஓய்வுபெற்றுள்ள இவர், தனது சொத்தில் கணிசமான பகுதியை சமூக நலப் பணிகளுக்காக ஒதுக்கி உள்ளார். ஆகவே, இவரது தற்போதைய சொத்து மதிப்பு 50 பில்லியன் டாலர் என மதிப்பிடப்பட்டுள்ளது. கேட்ஸ் ஃபவுண்டேஷன் என்கிற தொண்டு அமைப்பு மூலமாக பில் கேட்ஸ் ஆரோக்கியம், நோய்களை ஒழிப்பது, தடுப்பூசிகள், சுகாதாரம், மகளிர் சமஉரிமை, வறுமை ஒழிப்பு, மற்றும் வேளாண் வளர்ச்சி உள்ளிட்ட பல்வேறு அம்சங்களை மேம்படுத்தும் திட்டங்களுக்கு ஆதரவு அளித்து வருகிறார்.

பில் கேட்ஸ்

தனது தொண்டுப் பணிகளுக்கு ஸ்மிருதி இராணி நடிக்கும் தொடர் மூலமாக வலு சேர்க்க இவர் திட்டமிட்டுள்ளார். ஸ்மிருதி இரானி பாரதிய ஜனதா கட்சியில் இணைந்து நாடாளுமன்ற உறுப்பினர் மற்றும் மத்திய அமைச்சர் என முக்கிய பதவிகளை வகிப்பதற்கு முன்னர், தொலைக்காட்சி தொடரில் நடித்தது குறிப்பிடத்தக்கது. அப்போது கொண்ட ’கியூன் கி சாஸ் பி கபி பஹு தி’ தொடரின் முதல் பாகத்தில் ஸ்மிருதி இரானி நடித்தார். சென்ற வருட மக்களவைத் தேர்தலில் தோல்வியடைந்த பின்னர், அவர் மீண்டும் தொலைக்காட்சி தொடரில் நடிக்க தொடங்கியுள்ளார். தற்போது ’கியூன் கி சாஸ் பி கபி பஹு தி’ தொடரின் இரண்டாவது பாகத்தில் ஸ்மிருதி இரானி நடித்து வருகிறார். பாலாஜி டெலிபிலிம்ஸ் தயாரிப்பில் உருவான இந்தத் தொடர் மிகவும் பிரபலமானது என்பது குறிப்பிடத்தக்கது.