AR Rahman - Karthi
AR Rahman - Karthi Twitter
சினிமா

“என் குடும்பத்தினரும் அந்த இசை நிகழ்ச்சியில் இருந்தாங்க; I Stay with AR Rahman sir”- நடிகர் கார்த்தி

ஜெ.நிவேதா

நேற்று முன்தினம் இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் நடத்திய இசை கச்சேரியில் முறையான ஏற்பாடுகள் செய்யப்படாததால் ரசிகர்கள் பெருமளவில் பாதிக்கப்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்தது. இது பெரும் பேசுபொருளான நிலையில் இசைக்கச்சேரியை ஒருங்கிணைத்த நிறுவனம் அசௌகரியத்திற்காக மன்னிப்பு கோரியது.

ar rahman

பின்னர் இது குறித்து தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டிருந்த ஏ.ஆர்.ரஹ்மான், “டியர் சென்னை மக்களே, டிக்கெட் வாங்கியும் எதிர்பாராத சூழ்நிலையால் இசை நிகழ்ச்சியில் பங்கேற்க வரமுடியாதவர்கள் நீங்கள் வாங்கிய டிக்கெட் நகலை arr4chennai@btos.in என்ற மெயில் ஐடிக்கு அனுப்பி வையுங்கள். உடன் உங்களது குறைகளையும் கூறினால் எங்கள் குழு தகுந்த நடவடிக்கை எடுக்கும்” என தெரிவித்திருந்தார். மேலும் நாளிதழ் ஒன்றிற்கு பேட்டியளித்திருந்த ரஹ்மான், “ஒரு இசையமைப்பாளராக, ஒரு அற்புதமான நிகழ்ச்சியை வழங்குவதே எனது வேலை, மற்ற அனைத்தையும் கவனித்துக் கொள்ளலாம் என்று நினைத்தேன். ஆனால் அனைத்தும் எங்கேயோ தவறுதலாக அமைந்துவிட்டது. எனக்கு ஒவ்வொரு ரசிகரும் முக்கியம்” என பேசியிருந்தார்.

நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் பொறுப்பை ஏற்பார்களென நம்புகிறேன்! - கார்த்தி

இந்நிலையில் ஏ.ஆர்.ரஹ்மானுக்கு திரைத்துறையினரின் ஆதரவு குவிந்து வருகிறது. இதில் நேற்று இரவு இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா, ரஹ்மானுக்கு ஆதரவு தெரிவித்து ட்வீட் செய்திருந்தார். அதில் யுவன், “ஒரு சக இசையமைப்பாளராக ஏ.ஆர். ரஹ்மானுக்கு துணை நிற்க விரும்புகிறேன்” என்று கூறியிருந்தார்.

இந்நிலையில் தற்போது நடிகர் கார்த்தியும் ரஹ்மானுக்கு ஆதரவாக X தளத்தில் பதிவிட்டுள்ளார்.

தன் பதிவில் கார்த்தி, “கான்செர்ட்டில் நடந்தது அனைத்தும் துரதிஷ்டவசமானது. இருப்பினும் எனக்கு ரஹ்மான் சாரை தெரிந்தவரை, அவரும் இதனால் கடுமையாக பாதிக்கப்பட்டிருப்பார். என் குடும்பத்தினரும் அந்த கான்செர்ட்டில் பிரச்னைகளுக்கிடையே கலந்துகொண்டனர்தான். இருப்பினும் ரஹ்மான் சாருக்கு துணையாய் நிற்கிறேன் நான்! ரசிகர்களும், அவர்மீது அன்பை செலுத்தி வெறுப்பை ஒதுக்கவேண்டுமென கேட்டுக்கொள்கிறேன்! நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் பொறுப்பை ஏற்பார்களென நம்புகிறேன்” என்று குறிப்பிட்டுள்ளார்.