”பஹல்காமில் பயங்கரவாதத் தாக்குதலின்போது சுற்றுலாப் பயணிகளுக்கு உதவியவர்கள் காஷ்மீர் முஸ்லிம்கள்தான்” என ஜம்மு காஷ்மீர் மக்கள் ஜனநாயகக் கட்சி தலைவர் மெஹபூபா முஃப்தி தெரிவித்துள்ளார்.
பெரிய அளவிலான தேடுதல் வேட்டை அப்பகுதியில் தொடங்கப்பட்டுள்ளது. ராணுவம், மத்திய ரிசர்வ் போலீஸ் படை (CRPF), மற்றும் ஜம்மு காஷ்மீர் போலீசார் அந்தப் பகுதியை சுற்றி வளைத்துள்ளனர்.