காஷ்மீர் தாக்குதல்... தேசிய பாதுகாப்பு ஆலோசகருடன் பிரதமர் ஆலோசனை
தெற்கு காஷ்மீரில் உள்ள பகல்காமில் நேற்றைய தினம் (22.4.2025) தீவிரவாதிகள் நடத்திய கொடூர தாக்குதலில் சுற்றுலா பயணிகள் உட்பட சுமார் 25 பேர் உயிரிழந்தனர்.
இந்நிலையில், 2 நாள் அரசு முறைப்பயணமாக சவுதி அரேபியா சென்றிருந்த பிரதமர் மோடி இன்று (ஏப்.23) காலை புதுடெல்லி விமான நிலையம் வந்தடைந்தார். விமான நிலைய வளாகத்தில் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் மற்றும் வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் ஆகியோருடன் முக்கிய ஆலோசனை மேற்கொண்டார். பின்னர் அங்கிருந்து இல்லத்துக்கு புறப்பட்டார் பிரதமர் மோடி.
மேலும், இன்று மத்திய அமைச்சரவை மற்றும் முக்கிய பாதுகாப்புத் துறை அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்துகிறார் பிரதமர் மோடி. அமைச்சரவை கூட்டத்தில் உள்துறை அமைச்சர் அமித் ஷா மற்றும் நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் பங்கேற்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. அமித் ஷா, காஷ்மீர் சென்றுள்ளார். அங்கிருந்து அவர் டெல்லி திரும்புகிறார். அமெரிக்கா சென்றுள்ள நிர்மலா சீதாராமனும் நாடு திரும்புகிறார்.
இந்த நிலையில், பஹல்காம் பகுதியில் அப்பா மக்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்திய பயங்கரவாதிகளை தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. தரை வழியாகவும், ஹெலிகாப்டர் மற்றும் ட்ரோன் மூலம் தேடுதல் பணி மேற்கொண்டு வருகின்றனர்.