சம வேலைக்கு சம ஊதியம் என்றும் ஒப்பந்த முறையில் பணியாற்றும் செவிலியர்களுக்கும் நிரந்தர செவிலியர்களுக்கு இணையான ஊதியம் வழங்க வேண்டும் என தமிழக அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு.
ஆசிய கோப்பையில் நடைபெறவிருக்கும் இந்தியா - பாகிஸ்தான் போட்டியை ரத்து செய்யவேண்டும் என்று வழக்கு தொடரப்பட்ட நிலையில், உச்சநீதிமன்றம் போட்டியை ரத்து செய்ய முடியாது என மறுத்துள்ளது.
20% எத்தனால் கலந்த பெட்ரோலை விற்பனை செய்வதை கட்டாயமாக்கும் மத்திய அரசின் எத்தனால் கலப்புத் திட்டத்தை எதிர்த்து தொடரப்பட்ட பொது நல வழக்கை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.