நீட் தேர்வு என்பது திமுகவின் பிரச்னை கிடையாது ஒட்டுமொத்த மாணவர்களின் பிரச்னை என விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
நீட் தேர்வை ரத்து செய்ய வலியுறுத்தி திமுகவின் கையெழுத்து நடைபெற்று வரும் நிலையில், அதனொரு பகுதியாக சத்தியமூர்த்தி பவனில் கே.எஸ்.அழகிரி உள்ளிட்டோரிடம் கையொப்பங்களை பெற்றார் அமைச்சர் உதயநிதி.
நீட் தேர்வை எதிர்க்க கட்சிகளுக்கு உரிமையுள்ளது என சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது. மேலும் திமுகவின் கையெழுத்து இயக்கத்தால் என்ன பாதிப்பு என மனுதாரர் எம்.எல்.ரவிக்கு கேள்வி எழுப்பியுள்ளது.