உக்ரைன் ராணுவ வீரர்களின் சம்பளம் அதிரடி உயர்வு - அதிபர் ஜெலென்ஸ்கி அறிவிப்பு!
உக்ரைன் ராணுவத்தின் நிதி ஸ்திரத்தன்மையை அதிகரிக்கவும், பாதுகாப்பு கட்டமைப்பை மேம்படுத்தவும் புதிய திட்டங்களுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளதாக அதிபர் வொலோடிமிர் ஜெலென்ஸ்கி தெரிவித்துள்ளார்.போர்க்களத்திற்குப் பின்வரிசையில் உள்ள வீரர்களின் குறைந்தபட்ச மாதச் சம்பளம் 30,000 ஹிரிவ்னியாக்களாகவும், முன்னணியில் நின்று போரிடும் காலாட்படை வீரர்களின் சராசரி சம்பளம் 3,00,000 ஹிரிவ்னியாக்களாகவும் உயர்த்தப்படுகிறது.
ஒப்பந்தக் காலம் 10, 14, 24 மாதங்களாக நிர்ணயிக்கப்பட்டு, தற்காலிகப் பணிவிடுப்புக்கான தெளிவான விதிகள் சேர்க்கப்பட்டுள்ளன. அத்துடன் போர்க்களத் தளபதிகளின் ஊதியமும் அதிகரிக்கப்பட்டுள்ளது.உக்ரைன் ராணுவத்தில் வெளிநாட்டுத் தன்னார்வலர்கள் அதிகளவில் இணைவதற்கு ஏதுவாக, கூடுதல் ஆட்சேர்ப்பு வழிமுறைகளும் அதிக வாய்ப்புகளும் உருவாக்கப்படும்.
வீரர்கள் ஒரு பிரிவிலிருந்து மற்றொரு பிரிவிற்கு எளிதாக மாறுவதற்கான நடைமுறைகள் எளிமையாக்கப்படும். மேலும், ராணுவத்தில் பதவி உயர்வு பெறவும், புதியவர்கள் இணையவும் கூடுதல் ஊக்கத்தொகைகள் வழங்கப்படும்.இம்மாற்றங்கள் அனைத்தும் இந்த கோடைகாலத்தில் முழுமையாகச் செயல்திறனைக் காட்டும் என்று அதிபர்

