90S கிட்ஸ்களின் சூப்பர் ஸ்டார்... ஜான் சீனா ஓய்வு அறிவிப்பு.. சாதனைகளும் வாழ்க்கைப் பயணமும்..

WWE மல்யுத்தப் போட்டிகளில் சாம்பியன் பட்டங்களைக் குவித்த உலகப் புகழ்பெற்ற ஜான் சீனா, ஓய்வுபெறுவதாக அறிவித்துள்ளார்... அவரது சாதனைகளையும் வாழ்க்கை பயணத்தையும் பார்க்கலாம்...
john cena
john cenapt web

WWE விளையாட்டின் முடிசூடா மன்னன்... 16 முறை சாம்பியன்.. 20 ஆண்டுகளாக WWE போட்டியை ஆளும் மல்யுத்த சூப்பர் ஸ்டார்... இந்த பெருமைகளுக்கெல்லாம், அப்படியே பொருந்திப் போகிறவர்தான் ஜான் சீனா.

இவரின் பெயரைக் கேட்டாலே , 90s கிட்ஸ்களின் மனங்களில் உற்சாகம் பெருக்கெடுக்கும்... ஜான் சீனா களத்திற்குள் எண்ட்ரி கொடுக்கும் ஸ்டைல், மிகவும் பிரபலம்... தனித்துவமான திறமையால் எதிராளியை துவம்சம் செய்யும் இவர், பிக்ஷோ, மார்க் ஹென்றி உள்ளிட்ட வீரர்களை தோளில் தூக்கி மேடையில் வீசுவதை பார்த்து ஆர்ப்பரிக்காத ரசிகர்களே இருக்க முடியாது...

நடிகர்கள் மற்றும் மற்ற விளையாட்டு வீரர்கள் என உலகம் முழுவதும் ரசிகர் பட்டாளத்தை கொண்டுள்ள ஜான் சீனா, ஆயிரத்து 300-க்கும் அதிகமான போட்டிகளைக் கடந்து, இன்றளவும் WWE கோலோச்சி வருகிறார்... 2018 ஆம் ஆண்டு வரை விளையாட்டில் கவனம் செலுத்தி வந்த ஜான் சீனா, அதன் பிறகு தனது பார்வையை ஹாலிவுட் பக்கம் திருப்பினார்.

john cena
ஹாத்ரஸில் 121 உயிரிழப்புகளுக்கு விஷம் தெளித்தது காரணமா? போலே பாபாவின் வழக்கறிஞர் சொன்ன பகீர் தகவல்!

இதனால் ஜான் சீனாவால் பெரிய அளவில் களமாட முடியவில்லை... எனினும் முக்கியத் தொடர்களில் அவ்வப்போது விளையாடி ரசிகர்களுக்கு விருந்து படைத்து வந்தார்... போட்டிகளுக்கு மத்தியிலும்கூட, பல்வேறு வகைகளில் உடல்நலம் குன்றிய குழந்தைகளுக்கு, கல்வி - மருத்துவம் உள்ளிட்ட உதவிகளை செய்வதில் அதிக ஆர்வம் கொண்டிருந்தார் ரெஸ்ட்லிங் சூப்பர் ஸ்டார்...

கனடாவில் நடைபெற்ற போட்டியில் திடீரென தோன்றிய ஜான் சீனா, தனது ஓய்வு அறிவிப்பை வெளியிட்டு ரசிகர்களை சோகத்தில் மூழ்கடித்துள்ளார்... அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள 41ஆவது wrestilemania- தான் தனது கடைசி போட்டி என்றும், இத்தனை ஆண்டுகளாக தனக்கு வாய்ப்பளித்ததற்கும், தனக்காக குரல் கொடுத்ததற்கும் நன்றி கூறி உருகியுள்ளார். தன் வாழ்க்கையில் நண்பர்கள் இல்லாவிட்டாலும், எப்போதுமே தன்னுடைய WWE ரசிகர்கள் தான் துணை நின்று ஆதரவு கொடுத்திருப்பதாகவும் மனம் திறந்துள்ளார் ஜான் சீனா... WWE வீரராக, விளையாட்டுக் களத்தில் கடைசி அத்தியாயத்தை தாம் தொடங்கியுள்ளதாகவும் மனமுருகி பேசி, ரசிகர்களை கண்ணீர் வடிக்க வைத்துள்ளார்...

john cena
HBD DHONI | முடிசூடா மன்னன்.. என்றும் ராஜாதிராஜா... தோனியின் முறியடிக்கப்படாத சாதனைகள்!

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com