\
ஹல்க் ஹோகன்
ஹல்க் ஹோகன்pt web

‘டிரம்புக்கு ஓட்டுப்போடுங்க பேராண்டிகளா’ - மேடையிலேயே சட்டையைக் கிழித்து சூளுரைத்த WWE ஹல்க் ஹோகன்!

அமெரிக்காவில் முன்னாள் அதிபர் டிரம்புக்கான ஆதரவு பெருகிக்கொண்டே இருக்கிறது. கடந்த வாரம் நிகழ்ந்த துப்பாக்கிச்சூடு சம்பவத்திற்குப் பிறகு அது மேலும் அதிகரித்திருக்கிறது.
Published on

CHATGPTயை உருவாக்கியவரான சாம் ஆல்ட்மேன், “அதிபர் டிரம்ப் பாதுகாப்பாக இருக்கிறார்” என தன் ஆதரவை வெளிப்படையாகவே அறிவித்தார். உலகின் பெரும் பணக்காரரும், X தளத்தின் CEOவுமான எலான் மஸ்க் கடந்த சில மாதகாலமாகவே டிரம்பிற்கு ஆதரவாக இணையவழி பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார். தற்போது அந்த பட்டியலில் இணைந்திருக்கிறார் WWE புகழ் ஹல்க் ஹோகன்.

90ஸ் கிட்ஸ் மத்தியில் பிரபலமான பெயர் ஹல்க் ஹோகன். கையை சுழற்றியபடி காதருகே கொண்டு செல்லும் மேனரிஸம், பனியனை கிழித்துவிட்டு கத்துவது, அசோக் லீலேண்டு லாரியின் முகப்பு போல இருக்கும் மீசை என ஹல்க் ஹோகனை அறியாத WWE ரசிகர்களை விரல்விட்டு எண்ணிவிடலாம். '20 வருசத்துக்கு முன்னாடியே அவர் தாத்தாடா, இப்ப எப்படிடா' என இந்தியன் தாத்தா மோடில் நீங்கள் டவுட் ஆகலாம். இன்றும் அப்படியேதான் இருக்கிறார்.

ஹல்க் ஹோகன்
தலையில் தாக்கிய பந்து.. சுருண்டு விழுந்த பவுலர்.. கொட்டிய ரத்தம்.. திகைத்து நின்ற வீரர்கள்! #Video

நேற்று டிரம்புக்கு ஆதரவாக நடந்தகூட்டத்தில் கம்பீரமாக உரையாற்றினார் HULKAMANIA ஹல்க் ஹோகன். USA USA USA என மக்கள் முழங்க மைக்கைப் பிடித்தார் ஹல்க் ஹோகன். “இங்கு நான் செம்ம என்ர்ஜியைப் பார்க்கிறேன். நான் இன்னொரு உலக சாம்பியன்ஷிப் டைட்டில் வெல்லும் ஆர்வத்தை இந்த எனர்ஜி எனக்கு தருகிறது. ஆனால், இந்த கூட்டம் முழுக்க இருப்பது உண்மையான அமெரிக்கர்கள். அமெரிக்காவை மீண்டும் அதன் புகழுக்கு கொண்டு செல்ல என்னுடைய ஹீரோவால் மட்டுமே முடியும்.

நான் நிறைய டேக் டீம் சாம்பியன்களைப் பார்த்திருக்கிறேன். ஆனால், அவர்கள் எல்லோரையும்விட என் ஹீரோ டிரம்ப் சிறந்தவர். அவரால் மட்டுமே அமெரிக்காவை மீண்டும் புகழடைய வைக்க முடியும். இங்கு இருப்பவர்கள் எல்லாம் நிஜமான அமெரிக்கர்கள். ஆனால், டிரம்ப் அதிபராக பொறுப்பேற்றவுடன் நாம் எல்லோருமே டிரம்பைட்ஸ்” என கூறியவாறு தன அணிந்திருந்த பிளேஸரைக் கழற்றி, பனியனைக் கிழித்து டிரம்பிற்கு ஆதரவாக பிரசாரம் செய்தார். தேர்தல் நெருங்க நெருங்க, இன்னும் பல கூத்துகளை பார்க்கவிருக்கிறோம்.

ஹல்க் ஹோகன்
இந்தியா | ‘ஒவ்வொரு நிமிடத்திற்கும் 3 சிறுமிகள் குழந்தை திருமணம் செய்ய கட்டாயப்படுத்தப்படுகிறார்கள்’
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com