video image
video imageinst page

தலையில் தாக்கிய பந்து.. சுருண்டு விழுந்த பவுலர்.. கொட்டிய ரத்தம்.. திகைத்து நின்ற வீரர்கள்! #Video

மேஜர் லீக் கிரிக்கெட் ஒரு பயங்கரமான தருணத்தை கண்டது, வேகப்பந்து வீச்சாளர் கார்மி லு ரூக்ஸ், பேட்டர் ரியான் ரிக்லெட்டனின் ஒரு கடினமான ஷாட்டில் தலையில் அடிபட்டார்.
Published on

தென்னாப்பிரிக்காவில் சான் பிரான்சிஸ்கோ யூனிகார்ன்ஸ் மற்றும் சியாட்டில் ஓர்காஸ் ஆகிய அணிகளுக்கு இடையே மேஜர் கிரிக்கெட் லீக் போட்டி நடைபெற்றது. சான் பிரான்சிஸ்கோ யூனிகார்ன்ஸ் அணியின் வேகப்பந்து வீச்சாளர் கார்மி லு ரூக்ஸ் சியாட்டில் ஓர்காஸ் அணியின் பேட்டர் ரியான் ரிக்லெட்டனுக்குப் பந்துவீசினார். அந்த பந்தை எதிர்கொண்ட ரியான் வேகமாய் அடித்தார். அது, கார்மி லு ரூக்ஸ் தலையில் அடிபட்டு அப்படியே சுருண்டு விழுந்தார்.

பந்து தாக்கியதில் அவரது தலையில் இருந்து ரத்தம் வழிந்தது. இதைப் பார்த்தவுடன் மருத்துவர்கள் மைதானத்துக்குள் நுழைந்து சிகிச்சையளித்தனர். அதன்பிறகு, கார்மி லு ரூக்ஸ் மைதானத்திலிருந்து வெளியேறினார். இந்த பலமான தாக்குதல் ஏற்பட்டபோதும், ரூக்ஸ் சுயநினைவுடன் இருந்தார். இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. என்றாலும் இந்தப் போட்டியில் சியாட்டில் ஓர்காஸ் அணி தோல்வியுற்றது.

இதையும் படிக்க: ’என்ன சொல்றீங்க’|ரூ.1,600 கட்டணம்; வலியின்றி உயிர் துறக்க இயந்திரம்.. ஸ்விட்சர்லாந்து கண்டுபிடிப்பு!

video image
பிறப்புறுப்பில் தாக்கிய பந்து.. சுருண்டு விழுந்த சிறுவன் பலி.. மகாராஷ்டிராவில் நிகழ்ந்த சோகம் #Video

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com