காஸா அமைதி ஒப்பந்தம் குறித்து நாளை பேச்சுவார்த்தைpt web
உலகம்
காஸா அமைதி ஒப்பந்தம் குறித்து நாளை பேச்சுவார்த்தை.. பிரதமர் மோடிக்கு அழைப்பு!
காஸா போர் அமைதி ஒப்பந்தம் குறித்து நாளை எகிப்தில் உலகநாடுகளின் தலைவர்கள் பேச்சுவார்த்தையில் ஈடுபடுகின்றனர்.
Summary
காஸா போர் அமைதி ஒப்பந்தம் குறித்து நாளை எகிப்தில் உலகநாடுகளின் தலைவர்கள் பேச்சுவார்த்தையில் ஈடுபடுகின்றனர்.
காஸாவில் அமைதி ஏற்படுத்துவதற்கான ஒப்பந்தம் கையெழுத்திடும் நிகழ்வு நாளை நடைபெறுகிது. எகிப்தில் நடைபெறும் இந்நிகழ்வில் உலகத்தலைவர்கள் பங்கேற்க உள்ள நிலையில் பிரதமர் மோடிக்கும் அழைப்பு வந்துள்ளது. அமெரிக்க அதிபர் ட்ரம்ப்பும் எகிப்து அதிபர் அல் ஃபட்டா எல் சிசியும் இந்த அழைப்பை விடுத்துள்ளனர்.
காஸாமுகநூல்
காஸாவில் இஸ்ரேல் போரை நிறுத்தியுள்ள நிலையில் அங்கு நிரந்தரமாக அமைதியை ஏற்படுத்துவது தொடர்பாக ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட உள்ளது. இந்நிகழ்ச்சி எகிப்தில் நாளை 20 நாடுகளின் தலைவர்கள் முன்னிலையில் நடைபெற உள்ளது. இதற்கு பிரதமர் மோடிக்கு அழைப்பு வந்தாலும் அவர் செல்லவில்லை. மத்திய அமைச்சர் கீர்த்திவர்த்தன் சிங் பிரதமருக்கு பதிலாக பங்கேற்கிறார்.