USS Gerald R. Ford
USS Gerald R. Fordweb

309 நாட்கள்.. 39 கப்பல்களுக்கு வில்லன்.. திடீரென வளைகுடா விட்டு வெளியேறும் US விமானம் தாங்கி கப்பல்!

ஈரான் பதற்றம் நீடிக்கும் வேளையில், 10 மாத பணி முடித்து வளைகுடாவை விட்டு வெளியேறுகிறது அமெரிக்காவின் சக்திவாய்ந்த USS Gerald R. Ford விமானம் தாங்கி கப்பல்.
Published on
Summary

ஹார்முஸ் நீரிணையில் அமெரிக்கா–ஈரான் பதற்றம் நீடிக்கும் நிலையில், 309 நாட்கள் கடலில் பணியாற்றிய USS Gerald R. Ford விமானம் தாங்கி கப்பல் அவசரமாக வளைகுடாவை விட்டு விலகுகிறது. செங்கடலில் 39 கப்பல்களைத் தடுத்து திருப்பிய இந்த கப்பல், தொழில்நுட்ப சிக்கல்களால் திரும்புகிறது.

அமெரிக்கா - இஸ்ரேல் - ஈரான் இடையே நடைபெற்ற போர் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது. உலகின் 20 சதவிகிதம் கச்சா எண்ணெய் வர்த்தகம் நடைபெறும் ஹார்முஸ் நீரிணையில், அமெரிக்காவும் ஈரானும் தங்கள் கட்டுப்பாட்டை நிலைநாட்டும் போட்டியில் கப்பல்களைக் குறிவைத்து தாக்கியும், கைப்பற்றியும் அச்சுறுத்தி வருகின்றன.

அமெரிக்காவிற்கும் ஈரானுக்கும் இடையிலான அமைதிப் பேச்சுவார்த்தைகள் தேக்கமடைந்துள்ள நிலையில் USS Gerald R. Ford என்ற அமெரிக்க விமானம் தாங்கி கப்பல், வரும் நாட்களில் மத்திய கிழக்கிலிருந்து புறப்பட்டு தாயகம் திரும்புகிறது.

USS Gerald R. Ford
USS Gerald R. Fordweb

USS Gerald R. Ford எப்போது மத்திய கிழக்கிலிருந்து புறப்படும் என்பது துல்லியமாகத் தெரியவில்லை. ஆனால அது மே மாத நடுப்பகுதியில் வர்ஜீனியாவில் உள்ள தனது தாயகத்திற்குத் திரும்பும் என்று எதிர்பார்க்கப்படுகிறது .

USS Gerald R. Ford
UAE-யை எதிர்க்கும் பாகிஸ்தான்.. தூண்டி விடும் சவுதி! மோதலின் பின்னணி என்ன.?

ஈரானுடனான மோதல்களுக்கு மத்தியில், இப்பகுதியில் USS Gerald R. Ford உட்பட மூன்று விமானம் தாங்கி கப்பல்கள் நிற்கின்றன . மற்றவை யுஎஸ்எஸ் ஜார்ஜ் எச்.டபிள்யூ. புஷ் (USS George H.W. Bush) மற்றும் யுஎஸ்எஸ் ஆபிரகாம் லிங்கன் ( the USS Abraham Lincoln). ஃபோர்டு செங்கடலில் இருக்கும்போது, ​​ஈரானிய துறைமுகங்களிலிருந்து எண்ணெய் அல்லது பொருட்களை ஏற்றிச் செல்லும் கப்பல்களை தடுத்து, 39 கப்பல்களைத் திருப்பி அனுப்பியுள்ளது.. சில சமயங்களில் சில கப்பல்களை கைப்பற்றியும் உள்ளது.

USS Gerald R. Ford
USS Gerald R. Fordweb

USS Gerald R. Ford 309 நாட்கள் பணியில் ஈடுபடுத்தப்பட்டிருந்தது. இவ்வாறு கடலில் மிக நீண்ட காலம் இருந்ததால் இது கப்பலை மிகவும் சோர்வடையச் செய்துள்ளது. சலவை அறையில் ஏற்பட்ட தீ விபத்தில் சில மாலுமிகள் காயமடைந்ததைத் தொடர்ந்து, கப்பலில் சில பழுதுபார்ப்புகள் தேவைப்படுகிறது. மேலும் சில தொடர்ச்சியான சிக்கல்களும் ஏற்பட்டுள்ளன இதனால் கப்பல் வளைகுடாவை விட்டு வெளியேறுகிறது. கப்பல் துறைமுகத்திற்கு திரும்பியதும், அது விரிவான பழுதுபார்ப்பு மற்றும் பராமரிப்புப் பணிகளுக்கு உட்படுத்தப்படும் என்றும் கூறப்படுகிறது.

USS Gerald R. Ford
'அமெரிக்காவின் கடற்படை முற்றுகை சர்வதேச சட்டங்களுக்கு முரணானது' - ஈரான்
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com