தொடரும் போர்... கேள்விக்குறியான சுகாதாரம்! மாதவிடாய் தொடர்பாக பாலஸ்தீன பெண்களெடுத்த அதிர்ச்சி முடிவு

நிவாரணப் பொருட்கள் கிடைக்காததன் எதிரொலியாக, பாலஸ்தீனிய பெண்கள் பலரும் தங்கள் மாதவிடாய் காலத்தை தள்ளிப்போட மாத்திரைகள் உட்கொள்கின்றனர்.
பாதிக்கப்படும் பெண்கள்
பாதிக்கப்படும் பெண்கள்pt web

இஸ்ரேல் பாலஸ்தீனியத்தில் போர் நடந்துவரும் நிலையில், பாலஸ்தீனில் நிவாரணப் பொருட்கள் சென்றடைவதில் தடைகள் இருப்பதாக கடந்த பல வாரங்களாகவே குற்றச்சாட்டுகள் எழுந்தவண்ணம் உள்ளன. ஐ.நா உட்பட சர்வதேச அமைப்புகள், நாடுகள் பலவும் இதற்கு கண்டனம் தெரிவித்து வந்தன.

இந்நிலையில் நிவாரணப் பொருட்கள் கிடைக்காததன் எதிரொலியாக, பாலஸ்தீனிய பெண்கள் பலரும் தங்கள் மாதவிடாய் காலத்தை தள்ளிப்போட மாத்திரைகள் உட்கொள்கின்றனர் என்றும், இந்த முடிவுக்கு அவர்கள் நிர்ப்பந்திக்கப்படுகின்றனர் என்றும் தற்போது அதிர்ச்சி தகவல் வெளிவந்துள்ளது.

முகாம்களில் தங்கவைக்கப்பட்டிருப்பது, வெவ்வேறு இடங்களுக்கு மாற்றப்படுவது, பல நூறு பேருக்கு மத்தியில் இருப்பது, தண்ணீர் பற்றாக்குறை, நாப்கின் - டேம்பான்ஸ் - மென்சுரல் கப் போன்றவை கிடைப்பதில் பிரச்னை போன்ற காரணங்களினால் அப்பெண்கள் இந்த முடிவுக்கு தள்ளப்பட்டுள்ளனர். மாதவிடாயை தள்ளிப்போடுவதற்கான மாத்திரைகள் போலவே, மாதவிடாய்க்கால வலியை தவிர்க்கும் ஹார்மோன் மாத்திரைகளையும் அவர்கள் உட்கொள்கின்றனராம்.

பாதிக்கப்படும் பெண்கள்
இந்திய பெண்களின் மாதவிடாய் சுகாதாரம் கடைப்பிடிக்கும் முறை எப்படி இருக்கு? - தரவுகள் சொல்வதென்ன?

இதுபோன்ற மாத்திரைகள் ப்ரொஜெட்ரோன் என்ற ஹார்மோன் உற்பத்தியை அதிகரித்து, மாதவிடாயை தள்ளிப்போடும். இதுபோன்ற மாத்திரைகளை நீண்டகாலம் மருத்துவ பரிந்துரையின்றி, எவ்வித பிரச்னையும் இல்லாதவர்கள் உட்கொள்கையில், பிறப்புறுப்பில் முறையற்ற காலத்தில் ரத்தப்போக்கு (முறையற்ற மாதவிடாய் போல), வாந்தி, மயக்கம், அதிக மூட் ஸ்விங்க்ஸ் போன்றவை ஏற்படக்கூடும் என்பது மருத்துவர்களின் எச்சரிக்கை. இப்போதே பலருக்கும் இப்படியான பிரச்னைகளில் ஒருசில வரத்தொடங்கிவிட்டதாக அங்குள்ள ஊடகங்களில் கள ஆய்வு செய்து தெரிவித்துள்ளன.

காஸாவில் பல தாய்மார்களே தங்கள் மகளுக்கு இந்த மாத்திரைகளை பரிந்துரைக்கின்றனராம். இதிலும் பதின் பருவக் குழந்தைகளும், மெனோபாஸ் (மாதவிடாய் முடியும்) காலத்திலுள்ள பெண்கள் வயது தொடர்பான மாற்றங்களோடு சேர்த்து இதுமாதிரியான சிக்கல்களையும் எதிர்கொண்டு வருகின்றனர்.

பாதிக்கப்படும் பெண்கள்
`பெண் ஊழியர்களுக்கென எந்த மெனோபாஸ் பாலிசியும் அரசிடம் கிடையாது’-காரணம் சொன்ன அமைச்சர்

இதுதொடர்பாக அல்ஜசீரா வெளியிட்டுள்ள ஒரு கள நிலவரத்தின்படி, ‘நாப்கின்தான் அடிப்படை தேவை. ஆனால் அது இங்கு பல மருந்தகங்களில் கிடைப்பதே இல்லை. அதற்கான டிமாண்ட் அதிகரித்துள்ளது. ஆனால் ‘மாதவிடாய் தள்ளிப்போடும் மாத்திரைகள்’ இப்போது அதிகம் கிடைக்கிறது, அதுவும் மிக எளிதாக கிடைக்கிறது’ என்று தெரியவருகிறது. இதனால் மறைமுகமாக அப்பெண்கள் இம்மாத்திரைகளை எடுத்துக்கொள்ள நிர்ப்பந்திக்கப்படுகின்றனர் என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

அங்குள்ள ஒரு தாய் கூறுகையில், “என் 15 வயது மகளுக்கு நானே மாத்திரையை பரிந்துரைத்தேன். அவள் சில மாதங்களுக்கு முன்தான் தன்னுடைய முதல் மாதவிடாய் காலத்தை அடைந்தாள். அவளிடம் இப்போது எதற்கு இந்த மாத்திரை என என்னால் விளக்க முடியவில்லை. அதேநேரம் அவளுக்கு வேண்டியதையும் (நாப்கின்) என்னால் தரமுடியவில்லை. இந்த போர் முடிந்தால், என்னால் இதை அவளுக்கு விளக்க முடியுமென நம்புகிறேன். அதன்பின்னரே மாத்திரை வேண்டாமென அவளிடம் சொல்ல முடியும்” என்கிறார். இருப்பினும் மாத்திரைகளின் பக்கவிளைவுகள் பற்றிய பயம் அவர் மனம் முழுக்க நிரம்பிக்கிடக்கிறது.

என்று தணியும் இந்தப் போர்? என்பது மட்டுமே ஒவ்வொருவரின் எதிர்பார்ப்பும்.

பாதிக்கப்படும் பெண்கள்
மாதவிடாய் சுழற்சியில் இந்த மாற்றங்களா?! உடனே மருத்துவரை பாருங்க! #WorldMenopauseDay

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com