56 வயது பெண்ணுக்கு தொடர் முதுகுவலி : சோதனையில் அதிர்ச்சியடைந்த மருத்துவர்கள்

56 வயது பெண்ணுக்கு தொடர் முதுகுவலி : சோதனையில் அதிர்ச்சியடைந்த மருத்துவர்கள்

56 வயது பெண்ணுக்கு தொடர் முதுகுவலி : சோதனையில் அதிர்ச்சியடைந்த மருத்துவர்கள்
Published on

56 வயது பெண் ஒருவருக்கு தொடர் முதுகுவலி இருந்த நிலையில், அவரை சோதித்த போது கிட்ணியில் சுமார் 3,000 கற்கள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

சீனாவின் ஜியாங்ஸு மாகாணத்தில் உள்ள ஜாங்ஸூ பகுதியில் உஜின் என்ற மருத்துவமனை செயல்பட்டு வருகிறது. இந்த மருத்துவமனைக்கு வந்த ஷாங் (56) என்ற பெண், தனக்கு தொடர் முதுகுவலி இருப்பதாக மருத்துவர்களிடம் கூறியுள்ளார். எத்தனை நாட்களாக முதுகுவலி இருக்கிறது என மருத்துவர்கள் கேட்டபோது, சில வருடங்களாக இருப்பதாக அப்பெண் தெரிவித்துள்ளார். அவரை சில மருத்துவ பரிசோதனைகள் செய்த மருத்துவர்கள், பின்னர் அவரது கிட்னிகளை பரிசோதனை செய்துள்ளனர்.

அதில் வலதுபுற கிட்னியை பரிசோதனை செய்த மருத்துவர்கள் அதிர்ச்சியடைந்தனர். ஏனெனில் அதில் ஏராளமான சீறுநீரக கற்கள் இருந்துள்ளன. ஸ்கேன் செய்து பார்த்ததில் சுமார் ஆயிரக்கணக்கான கற்கள் இருந்தது தெரியவந்துள்ளது. பின்னர் அந்த பெண்ணுக்கு அறுவை சிகிச்சை செய்த மருத்துவர்கள், கிட்னியில் இருந்த கற்களை வெளியேற்றினர். வெளியேற்றிய பின்னர் அந்த கற்களை ஒரு கண்ணாடி குடுவைக்கு போட்டு எண்ணியுள்ளனர்.

மொத்தம் 2,980 சிறுநீரக கற்கள் இருந்துள்ளன. அந்த பெண் இத்தனை கற்களுடன் எப்படி சில வருடங்கள் இருந்தார் என மருத்துவர்கள் வியந்துபோயுள்ளனர். கின்னஸ் சாதனை புத்தகத்தில் உள்ள தகவல்படி, மகாராஷ்டிராவை சேர்ந்த தன்ராஜ் என்பவரின் கிட்னியில் இருந்து 1,72,155 கற்கள் அகற்றப்பட்டதே, இதுவரை உலக சாதனையாக உள்ளது. 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com