Nebraska wildfire
Nebraska wildfire X page

அமெரிக்கா | வரலாறு காணாத காட்டுத்தீ.. 6 லட்சம் ஏக்கர் நிலப்பரப்பு எரிந்து நாசம்!

நெப்ராஸ்காவில் இதுவரை இல்லாத அளவுக்கு மிகப்பெரிய காட்டுத்தீ ஏற்பட்டுள்ளது. இதனால் 6,00,000 ஏக்கருக்கும் அதிகமான நிலப்பரப்பு எரிந்து நாசமாகியுள்ளது.
Published on
Summary

நெப்ராஸ்காவில் வரலாறு காணாத காட்டுத் தீ, 6 லட்சம் ஏக்கருக்கும் மேற்பட்ட நிலப்பரப்பை எரித்துள்ளது. வயதான பெண் ஒருவர் உயிரிழந்தார். ஆளுநர் அவசர நிலையை அறிவித்துள்ளார். தீயணைப்புத் துறையினர் தீயை கட்டுப்படுத்த கடுமையாக போராடி வருகின்றனர்.

அமெரிக்காவின் நெப்ராஸ்கா மாநிலத்தில் கடந்த சில நாட்களாகக் கட்டுக்கடங்காமல் எரிந்து வரும் காட்டுத்தீ, மாநில வரலாற்றிலேயே மிகப்பெரிய விபத்தாக உருவெடுத்துள்ளது. கடந்த 12ஆம் தேதி முதல் பரவி வரும் இந்தக் காட்டுத்தீயால் இதுவரை சுமார் 6 லட்சம் ஏக்கருக்கும் அதிகமான நிலப்பரப்பு எரிந்துள்ளதாக மாநில ஆளுநர் ஜிம் பில்லன் உறுதிப்படுத்தியுள்ளார்.

Nebraska Wildfire
Nebraska Wildfire web

மாரில் காட்டுத்தீயிலிருந்து தப்பிக்க முயன்றபோது வயதான பெண்மணி ஒருவர் உயிரிழந்துள்ளார். நான்கு பெரிய தீப்பற்றல்கள் இன்னும் முழுமையாகக் கட்டுப்படுத்தப்படாமல் எரிந்து வருகின்றன. மாரில் தீ மின்சாரக் கம்பிகளில் ஏற்பட்ட உராய்வு மற்றும் பலத்த காற்றினால் உருவானது என்று கூறப்படுகிறது. இது சுமார் 4,50,000 ஏக்கரை அழித்துள்ளது.

Nebraska wildfire
லாஸ் ஏஞ்சலில் மீண்டும் பரவியக் காட்டுத்தீ.. பொதுமக்கள் அச்சம்!

ஆளுநர் ஜிம் பில்லன் பாதிக்கப்பட்ட பகுதிகளில் அவசர நிலையைப் பிரகடனம் செய்துள்ளார். தேசிய பாதுகாப்புப் படையினர் மற்றும் 36-க்கும் மேற்பட்ட தீயணைப்புத் துறையினர் தீயை அணைக்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.

மணிக்கு 50 மைல் வேகத்தில் வீசும் பலத்த காற்று மற்றும் வறண்ட வானிலை காரணமாக தீயைக் கட்டுப்படுத்துவதில் கடும் சவால்கள் நிலவுகின்றன. நெப்ராஸ்காவின் விவசாய நிலங்கள், மேய்ச்சல் பகுதிகள் மற்றும் பல வீடுகள் இந்தத் தீயினால் கடுமையாகச் சேதமடைந்துள்ளன

Nebraska wildfire
லாஸ் ஏஞ்சல்ஸ் காட்டுத்தீ.. விமானம் மூலம் கொட்டப்படும் பிங்க் நிற ரசாயனம் - என்ன அது?

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com