லாஸ் ஏஞ்சல்ஸ்
லாஸ் ஏஞ்சல்ஸ் முகநூல்

லாஸ் ஏஞ்சலில் மீண்டும் பரவியக் காட்டுத்தீ.. பொதுமக்கள் அச்சம்!

அமெரிக்காவில் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் மீண்டும் காட்டுத்தீ பரவத் தொடங்கி பொதுமக்களை அச்சமடையச் செய்துள்ளது. முதற்கட்டமாக அப்பகுதியில் வசிக்கும் 18 ஆயிரத்து 600 மக்கள் வெளியேற்றப்பட்டுள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
Published on

அமெரிக்காவில் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் மீண்டும் காட்டுத்தீ பரவத் தொடங்கி பொதுமக்களை அச்சமடையச் செய்துள்ளது.
காட்டுத்தீயால் லாஸ் ஏஞ்சல்ஸ் தெற்கு பகுதியில் 3 ஆயிரத்து 407 ஏக்கர் பரப்பளவில் நிலங்கள் சேதமடைந்துள்ளதாகவும், முதற்கட்டமாக அப்பகுதியில் வசிக்கும்
18 ஆயிரத்து 600 மக்கள் வெளியேற்றப்பட்டுள்ளதாகவும்
அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

காட்டுத்தீ காரணமாக சான் கேப்ரியேல் மலைத்தொடரில் உள்ள பூங்காவிற்குள் பார்வையாளர்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. வேகமாக பரவி வரும் காட்டுத்தீயை கட்டுக்குள் கொண்டு வரும் முயற்சியில் தீயணைப்புத்துறையினர் ஈடுபட்டுள்ளனர்.

கலிபோர்னியா காட்டுத்தீ
கலிபோர்னியா காட்டுத்தீகூகுள்

காட்டுத்தீ காரணமாக வானுயரத்திற்கு கரும்புகை எழும்பி
வருவதால், விமானங்களை மாற்று பாதையில் இயக்க
அறிவுறுத்தப்பட்டுள்ளது.

 லாஸ் ஏஞ்சல்ஸ்
கலிபோர்னியாவில் பரவும் காட்டுத்தீ.. ஆயிரக்கணக்கான மக்கள் வெளியேற்றம்.. பைடனை சாடிய ட்ரம்ப்!

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com